இஸ்லாமிக் இன்பர்மேஷனுக்கு மறுப்புக்கள்


நோம்பு (உபவாசம்) குறித்து இயேசுக் கிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ன கூறினார்

ஷப்பீர் அலி கீழ்கண்டவாறு எழுதுகிறார்:

இயேசு "நாற்பது நாட்கள் இரவும் பகலும் நோம்பு (உபவாசம்) இருந்தார்" என்று மத்தேயு சுவிசேஷம் சொல்கிறது (மத்தேயு 4:21). லூக்கா சுவிசேஷம் இந்த உபவாசம் பற்றி இன்னும் சில விவரங்களைக் கூறுகிறது "அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று" (லூக்கா 4:2). இயேசு உபவாசம் இருந்தார், ஆகையால் அவரை உண்மையாக பின்பற்றுபவர்கள், அவரது போதனையின்படி அவர்கள் கூட உபவாசம் இருக்கவேண்டும். இயேசு கூறினார்: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;” (யோவான் 8:31).

இயேசுவிடம் சீடர்கள் பற்றி மக்கள் குறைகூறினார்கள் "யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் பண்ணிக்கொண்டு வருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்." (லூக்கா 5:33). ஆனால், இயேசு நான் அவர்களோடு இருக்கும் போது சீடர்கள் உபவாசம் செய்யமாட்டார்கள், ஆனால், தான் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு அவர்கள் உபவாசம் செய்வார்கள் என்று கூறினார், "அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்" (லூக்கா 5:35). இதனால், தான் தேவனுக்காக எப்படி உபவாசம் செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுத்தார் ( மத்தேயு 6:16-18). அவர்கள் உபவாசம் செய்யவில்லையானால், இயேசுவின் இந்த கட்டளைகள் வீணாக இருக்கும்.

அதன் பிறகு சீடர்கள் உபவாசித்ததாக பைபிள் கூறுகிறது: "அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி" (அப்போஸ்தலர் 13:3), மற்றும் அவர்கள் "உபவாசித்து ஜெபம்பண்ணினார்கள்" (அப்போஸ்தலர் 14:23). உபவாசம் என்பது தேவனுடைய ஊழியர் செய்யவேண்டியது என்று பைபிள் கூறுகிறது (2 கொரிந்தியர் 6:5). அடிக்கடி உபவாசம் செய்வது இயேசுவின் சீடருக்கு அடையாளமாகும்.

நாம் மேலே காட்டிய லூக்கா 5:33ம் வசனத்தின்படி, 1) உபவாசம் என்பது உணவையும் தண்ணீரையும் தவிர்ப்பதாகும், 2) இயேசு சீடர்களோடு இருக்கும் போது சீடர்கள் உபவாசம் செய்யவில்லையானாலும், இயேசு மட்டும் உபவாசம் இருந்தார், அப்படி இல்லாமல் இருந்திருந்தால், இயேசு மீது கூட குற்றம் சுமத்தியிருப்பார்கள். இதுமட்டுமல்ல, யூத ரபிக்கள் கூட உபவாசம் இருந்தார்கள் (மத்தேயு 9:14 மற்றும் மாற்கு 2:18). இயேசுவை கூட ரபி என்று அழைத்தார்கள் (பார்க்க யோவான் 1:38, 3:2, 6:25 மற்றும் மத்தேயு 23:8). ஆக அவர் கூட உபவாசம் இருந்திருக்கிறார்.

ஒரு பையனிடமிருந்து பிசாசை துரத்த சீடர்களால் முடியவில்லை, ஆனால், இயேசு அதை துரத்தினார். இதைப் பற்றி இயேசுவிடம் சீடர்கள் கேட்ட போது, இப்படிப்பட்ட பிசாசு, ஜெபத்தினாலும் உபவாசத்தினாலே மாத்திரம் துரத்தமுடியும் என்று இயேசு பதில் அளித்தார் (மாற்கு 9:29).

இது நமக்கு எதைக் காட்டுகின்றது என்றால், சீடர்கள் உபவாசம் இருப்பதில்லை, அதனால் அவர்களால் பிசாசை துரத்தமுடியவில்லை, இயேசு உபவாசம் செய்ததினால், அவரால் துரத்தமுடிந்தது. பைபிளை பிரதி எடுப்பவர்களில் சிலர், "உபவாசம்" என்ற வார்த்தையை விட்டுவிட்டு பிரதி எடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு ஆர் எஸ் வீ மொழியாக்கத்தில் இப்படி உள்ளது, அதாவது இதன்படி பார்த்தால், இயேசுவின் சீடர்கள் ஜெபம் கூட செய்யவில்லை என்றுச் சொல்வதாக பொருள் படுகின்றது, இது முடியாத காரியமாகும். இதனால் தான் கத்தோலிக்க மொழியாக்கத்தில் (ஆர் எஸ் வீ) "உபவாசம்" என்ற வார்த்தை பழையபடி சேர்க்கப்பட்டது. ஆன்சியன்ட் ஈஸ்டன் டெக்ஸ்டின் புதிய ஏற்பாட்டிலும் உபவாசம் என்ற வார்த்தை உள்ளது (மாற்கு 9:29)
.

உபவாசம் என்பது வெறும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு மட்டும் சொந்தமான ஒரு பழக்கமல்ல, அனேக பழங்குடி மதங்களிலும் உபவாசம் கட்டாயம் இருக்கவேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. இந்த கட்டளையைப் பொருத்தவரையில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இதனை சரியாக பின்பற்றுவதில்லை என்றே சொல்லவேண்டும். ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் நோம்பு (உபவாசம்) இருக்கவேண்டும் என்று குர்‍ஆன் சொன்னாலும், பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் இந்த ரமலான் மாதத்தில் மட்டுமே அளவிற்கு அதிகமாக உணவு உட்கொள்ளப்படுகிறது. இது ரமலான் அல்லாத இதர மாதங்களில் தனிப்பட்ட முறையில் உட்கொள்ளப்படும் உணவை விட அதிகமாக உள்ளது. நான் குடியிருக்கும் பகுதியில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற பாகிஸ்தானிய உணவு விடுதியில் ரமலான் மாதத்தில் கண்டு இருக்கிறேன், அதாவது இஸ்லாமியர்கள் எப்போது மாலை வரும் என்று மிகவும் ஆவலுடன், பொறுமையிழந்து உணவு விடுதியில் சோர்வாக உட்கார்ந்து இருப்பார்கள், எப்போது சூரியன் அஸ்தமிக்கும், எப்போது சாப்பிடலாம் என்று காத்திருப்பார்கள்.

ஷப்பீர் அலி:

இந்த குழப்பத்திலிருந்து இறைவன் நம்மை காப்பாற்றியிருக்கின்றான், அதாவது அவரது கடைசி வேதமாகிய திருத்தப்படாத குர்‍ஆனில் உடல் நலம் உள்ள ஒவ்வொரு நம்பிக்கையாளரும், வருடத்தில் ஒரு மாதம் நோம்பு இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். இன்று இயேசுவின் உண்மை சீடர்கள் இறைவனின் கட்டளையின்படி நோம்பு இருக்கிறார்கள். முஸ்லீம்கள் இயேசுவின் மற்றும் இதர எல்லா தூதர்களின் உண்மையான சீடர்கள் ஆவார்கள்
.

இந்த இஸ்லாமியர் சொல்லும் விவரங்களில், முடிவுரையில் அனேக பிரச்சனைகள் உள்ளது:

1. மக்கள் வெளிப்படையாகவோ அல்லது தனிமையிலோ உபவாசம் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறானதாகும். இப்படிப்பட்ட விதத்தில் உபவாசம் இருந்த அக்கால மத ஏமாற்றுக்காரர்களை இயேசு சரியாக விமர்சித்துள்ளார். ஒரு சமுதாயம் (அரசாங்கம் அல்லது மத சமுதாயம்) மக்கள் உபவாசம் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், உண்மையாகவே அந்த சமுதாயம் மக்களின் மகிழ்ச்சியை அபகரித்துவிடுகிறது என்று பொருளாகும், அதாவது இறைவனின் மீது அன்பு கூர்ந்து செய்யக்கூடிய உபவாசம் என்பது சட்டத்திற்கு பயந்து கடமைக்காக செய்யக்கூடியதாக மாறிவிடுகின்றது. இப்படி பயப்பட்டு உபவாசம் செய்வது இறைவன் மீதுள்ள அன்பினால் செய்யப்பட்டதாக கருதப்படாது. இப்படி கட்டாயப்படுத்தப்பட்டு செய்யப்படும் உபவாசம், இயேசு சொன்ன உபவாசம் போன்றதல்ல, இஸ்லாமியர்களின் உபவாசம் இயேசுவின் போதனைக்கு முரணானது.

2. தேவனுக்கு மட்டுமே நம் உபவாசம் (நோம்பு) தெரியவேண்டும் என்று இயேசு கூறினார். அந்தரங்கத்தில் அல்லாமல், அம்பளத்தில் உபவாசம் இருந்தால் (நாம் உபவாசம் இருக்கிறோம் என்று மற்றவர்களுக்கு தெரியும் படி செய்தால்), அதன் பலனை நாம் அடைந்துவிட்டோம் என்று பொருள், அதாவது சமுதாயத்திற்கு நாம் உபவாசம் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டோம், பலனை பெற்றுவிட்டோம் என்று பொருளாகும். ஆனால், நாம் இரகசியமாக உபவாசம் இருப்போமானால் (அதிகமாக தம்பட்டம் அடிக்காமல் உபவாசித்தால்) சொர்க்கத்தில் இறைவனுடன் நமக்கு அதன் பலன் கிடைக்கும். ஆக, இன்னொரு முறைச் சொல்கிறேன், ரமலான் நோம்பு என்பது யாருக்கும் தெரியாமல், இறைவனுக்கு மட்டும் தெரியும் படி செய்யப்படாமல், ஊர் மக்கள் அறியும் படி செய்யப்படுவதினால், இது இயேசுவின் போதனையின் படி செய்யப்பட்ட நோம்பு அல்ல.

3. நாம் நோம்பு இருப்பதின் நோக்கமென்ன? நாம் நோம்பு இருப்பதினால் இறைவனை திருப்திப்படுத்தி நம்முடைய பாவங்களை அதன் மூலம் கழுவிக்கொள்ளலாமா? இல்லை. நம்முடைய பாவங்களை இயேசுக் கிறிஸ்து மட்டுமே நீக்கமுடியும். நோம்பு இருப்பதோ அல்லது இதர நல்ல காரியங்களை செய்வதோ, மகா பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக நம்மை பிழையற்றவர்களாக மாற்றமுடியாது. நம்மை பிழையற்றவர்களாக மாற்றுவது இயேசுவின் இரத்தம் மட்டுமே. நாம் இயேசுவை நம் உள்ளத்தில் அங்கீகரித்துவிட்டால், பிறகு உபவாசம் மூலமாக நாம் தேவனுடனான நம்முடைய உறவை மேம்படுத்திக்கொள்ளலாம். எனினும், இயேசு சொன்னவற்றை நாம் பின்பற்றவேண்டும், அதாவது நம்முடைய உபவாசம் தனிப்பட்ட முறையில் தேவனுக்கு மட்டும் தெரியும் வண்ணம் இருக்கவேண்டும், இது தேவன் மீது நாம் வைத்துள்ள அன்பின் அடையாளமாகவும், சக மனிதர்கள் மீதுள்ள நம்முடைய அன்பின் அடையாளமாகவும் இருக்கவேண்டும். ஆக, யார் யாரெல்லாம் இயேசுவை தங்கள் இறைவனாக இரட்சகராக அங்கீகரித்துள்ளார்களோ,யார் யாரெல்லாம் இயேசுவின் போதனைகளை பின்பற்றுகிறார்களோ, அவர்கள் மட்டுமே இயேசுவின் "உண்மையான சீடர்களாக" கருதப்படுவார்கள்.

ஆன்ட்ரூ வார்கோ

ஆங்கில மூலம்: Responses to "Islamic Information" - What Jesus on whom be peace said about Fasting?

ஷப்பீர் அலி மற்றும் இஸ்லாமிக் இன்பர்மேஷனுக்கு அளித்த மறுப்புக்கள்