பணமும் இஸ்லாமுக்கு மாறியவர்களும்

இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது

குர்‍ஆனில் நாம் கீழ்கண்ட விதமாக படிக்கிறோம்:

முஹம்மது ஜான் தமிழாக்கம்

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)

பீஜே தமிழாக்கம்

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்களுக்கும். அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (9:60)

யூசுப் அலி ஆங்கில‌ மொழியாக்கம்

"Alms are for the poor and the needy, and those employed to administer the (funds); for those whose hearts have been (recently) reconciled (to Truth); for those in bondage and in debt; in the cause of God; and for the wayfarer: (thus is it) ordained by God, and God is full of knowledge and wisdom" [Surat at-Taubah 9:60; translation by Yusuf Ali]

கீழே கொடுக்கப்பட்ட விளக்கம், புகழ் பெற்ற இஸ்லாமிய விரிவுரையாளராகிய இபின் கதிர் அவர்களின் விரிவுரையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். குர்‍ஆன் 9:60ம் வசனத்தின் விரிவுரை இவ்விதமாக உள்ளது:

"இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்" என்ற பிரிவில் வருபவர்கள் இவர்களாவார்கள்: அதாவது இஸ்லாமுக்கு மாறுவதற்காக பணம் கொடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இது எப்படியென்றால், ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த பொருட்களிலிருந்து முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) சில பொருட்களை சஃப்வான் பின் உமய்யா என்பவருக்கு கொடுத்தார்கள். இவர் ஒரு இஸ்லாமியரல்லாதவராக (முஸ்ரிக்காக) இருந்து அந்த யுத்தத்தில் சண்டையிட்டு இருந்தார்.... (ஸயித் பின் அல் மஸியப் என்பவரிடமிருந்து, யூனிஸ் அல் ஜஹ்ரியிடமிருந்து, இபின் அல் முபாரக் என்பவரிடமிருந்து, ஜகரியா பின் உத்தி அறிவித்ததாவது) சஃப்வான் பின் உமய்யா கூறியதாக இமாம் அஹமத் கூறியதாவது: "இறைத்தூதர் - அவர் மீது சாந்தி உண்டாகட்டும், ஹுனைன் யுத்தத்தில் எனக்கு பொருட்கள் (பணம்) கொடுத்தார்கள், நான் அதிகமாக வெறுக்கும் நபர்களில் இறைத்துதரும் ஒருவராக இருந்தார்கள்; ஆனால், "நான் அதிகமாக நேசிக்கும் நபர்களில் அவர் ஒருவராக இருக்கிறார் என்று நான் நினைக்கும் வரையிலும் அவர் எனக்கு பொருட்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்" [*].

அவர்களில் சிலருக்கு பணம் தரப்பட்டது, அவர்கள் இஸ்லாமை புரிந்துக்கொள்ளவும், தங்கள் இதயத்தில் இஸ்லாமிய நம்பிக்கையை வலுப்படுத்தவும் அவர்களுக்கு பணம் தரப்பட்டது. இது எப்படியென்றால், ஹுனைன் போருக்கு பிறகு விடுதலையாக்கப்பட்ட கைதிகளில் ஏழையானவர்களுக்கு முஹம்மது கொடுத்தார்கள். அவர்களில் சிறந்த வம்சமுள்ளவர்களுக்கு நூறு ஒட்டகங்களை முஹம்மது கொடுத்தார்கள். மற்றும் முஹம்மது இவ்விதமாக கூறினார்கள்: "ஒருவர் இன்னொருவருக்கு இப்படி பணம் தருவதை நான் நேசிக்கின்றேன், ஏனென்றால், இந்த இஸ்லாமியரல்லாதவர்களை நரக நெருப்பில் அல்லாஹ் போடுவான் என்பதாக நான் உணர்ந்து பயப்படுகிறேன்". மற்றும் இதே போல சஹீஹ்யிலும் (புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களிலும்) கூறப்பட்டுள்ளது, அதாவது இபின் சயீத் கூறியதாவது: "அலி ஒரு முறை "யெமன்" என்ற நாட்டின் "பொன்னை" இன்னும் அந்த பொன்னில் மண் ஒட்டியிருந்த நிலையிலேயே அதனை இறைத்தூதருக்கு அவர் மீது சாந்தி உண்டாகட்டும், அனுப்பினார்கள். அந்த தங்கத்தை முஹம்மது அவர்கள், கீழ் கண்ட நான்கு பேருக்கு பகிர்ந்துக் கொடுத்தார்கள்: அல் அக்ரா பின் அல் ஹபிஸ், அய்யினா பின் பத்ர், அல்-கமத் பின் ஔலதாஹ் மற்றும் ஜையத் அல் கய்ர். பிறகு முஹம்மது அவர்கள் "அட்டா அலஃபுஹும் (Atta'alafuhum) - "நான் அவர்களின் இருதயத்தை உண்மையின்பால் ஈர்க்கிறேன்" என்று கூறினார்கள், சிலருக்கு நெருக்கமானவர்களிடம் தர்ம பணத்தை வசூல் செய்ய பணம் தரப்பட்டது, சிலருக்கு இஸ்லாமியர்களை எல்லைப்புறங்களில் காக்க பணம் தரப்பட்டது.

ஆதார நூற்பட்டியல்:

[*] அஹமத், முஸ்லீம் மற்றும் திர்மிதி ஹதீஸ்கள்
(தமிழில் மேலே உள்ள மொழியாக்கமானது நம் சொந்த மொழியாக்கமாகும், இதன் அரபி மூலத்தை இக்கட்டுரையின் கீழே காணலாம்).


இந்த ஹதீஸ்கள் இணையத்தில் காணலாம்:

அரபியில்: மஸ்நத் அஹமத், எண் 14765; அல் திர்மிதி, எண் 602; (ஒரே மாதிரி ஹதிஸ் இல்லை, ஆனால், இந்த விவரம் உள்ள ஹதீஸ்) சஹீஹ் முஸ்லீம், எண் 1753 & 1757

ஆங்கிலம்: (ஆங்கிலத்தில் ஒரு ஹதீஸ் மட்டுமே இணையத்தில் கிடைக்கிறது) சஹீஹ் முஸ்லீம், எண் 2310 (அரபியில் இந்த ஹதீஸின் எண் 1757).

• இந்த தலைப்பு ஜகாத் பற்றிய இதர மேற்க்கோள்கள் மற்றும் விளக்கங்களை இங்கு காணலாம்.


وأما المؤلفة قلوبهم فأقسام : منهم من يعطى ليسلم كما أعطى النبي صلى الله عليه وآله وسلم صفوان بن أمية من غنائم حنين وقد كان شهدها مشركا قال فلم يزل يعطيني حتى سار أحب الناس إلي بعد أن كان أبغض الناس إلي كما قال الإمام أحمد : حدثنا زكريا بن عدي أنا ابن المبارك عن يونس عن الزهري عن سعيد بن المسيب عن صفوان بن أمية قال : أعطاني رسول الله صلى الله عليه وسلم يوم حنين وإنه لأبغض الناس إلي فما زال يعطيني حتى إنه لأحب الناس إلي ورواه مسلم والترمذي من حديث يونس عن الزهري به ومنهم من يعطى ليحسن إسلامه ويثبت قلبه كما أعطى يوم حنين أيضا جماعة من صناديد الطلقاء وأشرافهم مائة من الإبل وقال " إني لأعطي الرجل وغيره أحب إلي منه خشية أن يكبه الله على وجهه في نار جهنم " . وفي الصحيحين عن أبي سعيد أن عليا بعث إلى النبي صلى الله عليه وآله وسلم بذهيبة في تربتها من اليمن فقسمها بين أربعة نفر : الأقرع بن حابس وعيينة بن بدر وعلقمة بن علاثة وزيد الخير وقال " أتألفهم " ومنهم من يعطى لما يرجى من إسلام نظرائه ومنهم من يعطى ليجبي الصدقات ممن يليه أو ليدفع عن حوزة المسلمين الضرر من أطراف البلاد.

(Source: Tafsir Ibn Kathir, commentary on Sura 9:60, published online by Al-Islam.com, developed by Harf Information Technology)

ஆங்கில மூலம்: Money and Converts

குர்-ஆன் விரியுரை கட்டுரைகள்