குர்-ஆனும் விஞ்ஞானமும்

சாலொமோனும் உயிரிணங்களும் (கரையான், எறும்பு & ஹூத்ஹூத் பறவை)

எப்படி ஒரு சிறிய புழு சாலொமோனுடைய முழு தடியையும் தின்றுவிட்டது? அந்த புழு தடியை முழுவதும் திண்ணும் வரை பல மாதங்கள் சாலமோன் அப்படியே விழாமல் நின்றுக்கொண்டு இருந்தாரா?

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் “நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழுவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்கமாட்டோமே” என்பதை ஜின்கள் விளங்கிக்கொண்டன. (குர்-ஆன் 34:14) (பீஜே தமிழாக்கம்)

சாலொமோன் எறும்புகள் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார் (குர்-ஆன் 27:19). தன்னைச் சுற்றியுள்ள புழூ பூச்சிகளின் பேச்சுக்களை தொடர்ந்து எப்போதும் கேட்டுக்கொண்டு எப்படி அவரால் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்கமுடிந்தது? தன் காதுகளால் தொடர்ந்து இந்த சத்தங்களை கேட்டு அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்திருப்பார்.

27:17. ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.

27:18. அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது .

27:19. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!" என்றார். (குர்-ஆன் 27:17-19)
 

ஆனால், எறும்புகள் மனிதர்கள் பற்றி இப்படி நினைக்கின்றன என்றுச் சொல்வதை யார் நம்புவார்கள்? நான் எறும்புகள் மீது காலை வைக்கும் போது அவைகள் ஓடி ஒளிந்துக் கொள்வதை நான் காணவில்லை. நாம் அவர்கள் மீது கால்களை வைத்து மிதித்தால், அவைகள் மரித்துவிடுவார்கள் என்று எறும்புகள் அறிந்திருந்தால், ஏன் அவைகள் சீக்கிரமாக ஓடி மறைந்து ஒளிவதில்லை?

சாலொமோனுக்கு பறவைகளிலும், ஜின்களிலும் படைகள் இருந்தன என்று குர்-ஆன் கூறுகிறது (27:17). இதிலும் மேலும் ஆச்சரியப்படும் விவரம் என்னவென்றால், ஒரு புழுக்கொத்தி பறவை சாலொமோனுடன் செய்த நீண்ட உரையாடலாகும். இதனை நாம் குர்-ஆன் 27:20-28 வரையுள்ள வசனங்களில் காணலாம். இது விஞ்ஞானத்திற்கு ஏற்காத ஒன்றாக காணப்படுகின்றது.

27:20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். "ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா ? என்றார்.

27:21. "அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்" (என்றும் கூறினார்).

27:22. (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. "உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன் " என்று கூறியது.

27:23. "நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது"

27:24. "அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள்" (என்றும் கூறியது.)

27:25. வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான்.

27:26. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷுக்கு அதிபதி.

27:27. "நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்'' என்று அவர் கூறினார்.

27:28. "எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் அதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!" (என்றும் கூறினார்).

குர்-ஆனின் படி, சாலொமோன் இந்த பறவையை ஷேபா அரசியிடம் அனுப்புகிறார். அந்த அரசி வந்து அல்லாஹ்வை தொழுதுக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறார், மற்றும் இதர கேள்விகளையும் கேட்கிறார்.

இந்த ஷேபா அரசியைப் பற்றி பைபிள் வேறு வகையான விவரங்களைத் தருகிறது. அதாவது இந்த இராணி, சாலொமோனின் ஞானம் மற்றும் இதர சாதனைகளை பற்றி கேள்விப்பட்டு, அவரை சோதிக்கும் படி வருகிறார். பல கடினமான கேள்விகளை சாலொமோனிடம் கேட்டு அவர் கொடுத்த பதில்களால் ஆச்சரியப்பட்டு இஸ்ரவேலின் தேவனை புகழ்ந்து பேசுகிறாள். குர்-ஆன் சொல்வது போல, சாலொமோன் ஷேபா இராணியை “மிரட்டவில்லை”, அதற்கு பதிலாக அந்த இராணி சாலொமோனின் ஞானத்தைப் பற்றி ஆச்சரியப்பட்டு, தேவன் அவருக்கு கொடுத்திருந்த ஆசீர்வாதங்களை கண்டதினால், ஆச்சரியப்பட்டு தேவனை புகழுகிறாள் (1 இராஜாக்கள் 10:9).

ஆங்கில மூலம்: Solomon and Animals

இதர குர்-ஆன் முரண்பாடுகள்