நரகத்தில் உள்ளவர்களுக்கு உணவு எது?

குர்-ஆன் முரண்பாடுகள்

உமர்

பதில்: நரகத்தில் உள்ள மக்களுக்கு எது உணவாக கொடுக்கப்படும் என்ற விசயத்தில் குர்-ஆன் பல இடங்களில் முரண்படுகிறது.

1) விஷச்செடிகள்:

குர்-ஆன் 88:6 சொல்லுகிறது, நரகத்தில் உள்ளவர்களுக்கு விஷச்செடிகளைத்தவிர வேறு உணவில்லை. 

குர்-ஆன் 88:6

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.

2) சீழ் நீர்:

குர்-ஆன் 69:36 அடித்துச் சொல்கிறது, அவர்களுக்கு சீழ் நீர் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கப்படாது. 

குர்-ஆன் 69:36

சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.

3) ஜக்கூம் மரம் மற்றும் கொதிக்கும் நீர்:

இங்கு மறுபடியும் குர்-ஆன் ஜக்கூம் மரத்தைப் பற்றியும் கொதிக்கும் நீரைப்பற்றியும் பேசுகிறது.

குர்-ஆன் 37:62-67

அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருந்து கள்ளி) "ஜக்கூம்" என்ற மரமா? நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம். மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும். அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப்போலிருக்கும். நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக்கொள்வார்கள். பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.

ஒரு வேளை, விஷச்செடிகளும், ஜக்கூம் மரமும் ஒன்றுதான் என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால், சீழ் நீரும், கொதிக்கும் நீரும் கொடுக்கப்படும் என்று குர்-ஆன் சொல்கிறதே! அதை என்னச்செய்ய ? அது மட்டுமில்லை, சீழ் நீர் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கப்படுவதில்லை என்று குர்-ஆன் சொல்கிறது. இது ஒரு புறமிருக்க, குர்-ஆன் 88:6 ல் சொல்லப்படுவது விஷச் "செடி", மற்றும் 37:62-67 வரை சொல்லப்படுவது "செடி" இல்லை "மரம்". செடிக்கும் மரத்திற்கும் வித்தியாசம் இல்லையா? சிந்தியுங்கள்.


இதர குர்-ஆன் முரண்பாடுகளை படிக்கவும்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்