இறைவனின் சாயலில் உருவாக்கப்பட்டவனின் உருவத்தை குலைப்பது சரியோ?

(Created in the Image of God)

ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்

 தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவர்கள்

சில நேரங்களில் இந்த தளத்தில் பதிக்கப்படும் கட்டுரைகள் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மார்க்கங்களில் காணப்படும் இறையியல் வித்தியாசத்தை ஒப்பிட்டு எழுதப்படுகின்றன. அவைகள் அவ்வப்போது மிகவும் வேடிக்கையாகவும் அமைந்துவிடுகின்றன. சில வித்தியாசங்களை நாம் நேரடியாக புரிந்துக்கொள்ளலாம். இந்த வித்தியாசங்கள் உரையாடுவதற்கு மிகவும் உபயோகமானவைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு வித்தியாசங்களில் ஒன்று “மனிதன் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டு இருக்கின்றான்” என்பது பற்றியதாகும்.

ஆதியாகம்ம் 1:26ல், “மனிதனை இறைவன் தம் சாயலின் படி படைத்தார்” என்று இறைவன் கூறுகிறார். கிறிஸ்தவ அறிஞர்கள் மத்தியிலே, ”இறைவனின் சாயலில்” என்றால் என்ன அர்த்தம்? என்று  மிகப்பெரிய விவாதம் நடந்துக்கொண்டு இருக்கிறது.  ஒன்று மட்டும் தெளிவாக நமக்குத் தெரியும், அது என்னவென்றால், மனிதர்களாகிய நாம் ”ஆவியாக” இருக்கின்ற இறைவனோடு நம்மை நேரடியாக எப்போதும் ஒப்பிடமுடியாது என்பதாகும் (யோவான் 4:24). ஆனால், இறைவன் நம்மை வேறு ஒரு வகையில் படைத்தார், அந்த வகை மிகவும் சிறப்பானது, அது என்னவென்றால், ”அவரைப் போல (அ) அவரது சாயலில் நம்மை படைத்தார்” என்பதாகும் (சங்கிதம் 8:5; 139:14).

இப்போது சில கேள்விகள் நமக்கு எழுகின்றது: நாம் எந்த வகையில் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டு இருக்கிறோம்? இந்த விஷயத்திற்கும் இஸ்லாமுடைய அல்லாஹ்விற்கும் என்ன சம்மந்தம் உள்ளது? என்பதாகும்.  முதலாவதாக நாம் நித்திய காலம் வாழுபவர்களாக படைக்கப்பட்டு இருக்கிறோம் (eternal beings) என்பதை நாம் அறியவேண்டும்.  நாம் நித்திய காலம் வாழுபவர்கள் என்பதால், நமக்கு ஆரம்பமில்லை என்று அர்த்தம் செய்துக் கொள்ளக்கூடாது. நமக்கு முடிவு தான் இல்லையே தவிர, நமக்கு ஆரம்பம் உள்ளது (நாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளோம்).  ஒன்று, நாம் இறைவனோடு சொர்க்கத்தில் நித்திய நித்தியமாக வாழ்வோம், அல்லது இறைவன் இல்லாமல் நரகத்தில் நித்திய காலமாக இருப்போம். இந்த இரண்டு இடங்களில் ஏதோ ஒரு இடத்தை நம்மில் ஒவ்வொருவரும் தெரிவு செய்யவேண்டும். இது கூட நாம் இறைவனைப் போல இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டுகின்றது. அதாவது நம்மில் ஒவ்வொருவருக்கும் “சுயமாக தெரிவு செய்யும் அறிவு (Free Will) ” உள்ளது. நாம் சில நேரங்களில் வேண்டுமென்றே சில முடிவுகளை எடுக்கிறோம், அது நம்மைச் சுற்றியுள்ள உலகை பாதிக்கின்றது. வேறு வகையில் கூறவேண்டுமென்றால், நாம் இறைவனைப் போல இருக்கிறோம், அதாவது நமக்கும் மூன்று வகையான நிலைகள் உள்ளன. அதாவது நமக்கு ஆவீ, ஆத்துமா, சரீரம் என்று மூன்று நிலைகள் நமக்குள் உண்டு (1 தெச 5:23). நான் சொல்லும் இந்த உவமை திரித்துவத்திற்கு விளக்கமல்ல.  ஆனால், எனக்குள் இருக்கும் இந்த மூன்றும் செயல்படும் விதம் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது, என்னால் அதனை புரிந்துக்கொள்ளவே முடிவதில்லை.

பைபிள் முழுவதும் நாம் படித்துப் பார்த்தால், தேவன் தான் படைத்த மனித இனம் பற்றி அதிகமாக அக்கரை கொள்கிறார், அவர்களை காக்கிறார், அவர்கள் பட்சத்தில் பொறுமையோடு இருக்கிறார் என்பதை அறிய முடியும் (சங்கீதம் 8:4, 2 பேதுரு 3:9). இதுமட்டுமல்ல, அவரை நாம் புறக்கணிப்பதற்கு கூட நமக்கு “சுயமாக முடிவு எடுக்கும் அறிவை”  கொடுத்து இருக்கிறார். அதாவது தேவன் மீது நாம் நம்பிக்கை வைக்காமல் இருப்பதற்கும்,  நமக்கு சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை கொடுத்துள்ளார். இதைப் பற்றி சிந்தித்தால், இது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவர் நம்மை எவ்வளவு  நேசிக்கிறார் என்று பார்த்தால், அவர் இலவசமாக கொடுக்கும் நித்திய ஜீவனையும், நாம் நம்முடைய சுய முடிவு மூலமாக புறக்கணிக்கவும், நம்முடைய சுதந்திரத்தை நாம் பயன்படுத்தவும் அவர் உரிமையை கொடுத்துள்ளார். ஆனால், அவரை நாம் புறக்கணித்தால், நித்திய காலமாக நாம் அவரைப் பிரிந்து இருக்கவேண்டிய நிலை வரும்.

இதுவரை நாம் பைபிளின் தேவன் எப்படி மனிதர்களை பார்க்கிறார் என்பதை கவனித்தோம். இப்போது அல்லாஹ் எப்படி மனிதவர்க்கத்தை பார்க்கிறார்? என்பதை கவனிப்போம். மேலோட்டமாக பார்த்தால், இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒரே மாதிரியாகத் தான் கூறுகின்றன, அதாவது ஆதாமை இறைவன் தன் சாயலின் படியே படைத்தார் [1] என்பதாகும். ஆனால், மிகவும் ஆழமாக நாம் ஆய்வு செய்தால், அல்லாஹ் எப்படி தன் படைப்பாகிய மனிதர்களிடம் செயல்பட்டார் என்பதை கவனிக்கலாம். நேரம் காலம் குறிப்பிடப்படாத, பெயர் குறிப்பிடாத ஊரில் வசித்த அவநம்பிக்கையாளர்களிடம் அல்லாஹ் எப்படி நடந்துக்கொண்டார் என்பதை நாம் குர்-ஆனில் வாசிக்கலாம்.

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம். (குர்-ஆன் 2:65 – முஹம்மது ஜான் தமிழாக்கம்)

மற்றும்

 “அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (குர்-ஆன் 5:60 முஹம்மது ஜான் தமிழாக்கம்)

குர்-ஆன் விரிவுரையாளர்கள் கொடுத்த விளக்கங்கள் (தஃப்ஸீர் [2]) இந்த வசனங்கள் பற்றி கூறும் போது, இந்த வசனங்களில் சொல்லப்பட்ட சாபங்கள் ஏதோ ஒரு உவமையாக கூறப்பட்டதல்ல,  உண்மையாகவே அந்த மக்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாறினார்கள் என்று சொல்கிறார்கள். இஸ்லாமிய விரிவுரையாளர் “மௌலான முஃப்டி முஹம்மத் ஹாஃபி” தம்முடைய தஃப்ஸீர் “மாஅரிஃபுல் குர்-ஆன்” என்ற விரிவுரையின் பின் குறிப்பில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

எழுத்தின் படி அல்லாமல், வேறு வகையாக  (உவமேயமாக) பொருள் கொள்ளுதல் என்பது சமீபகாலத்து இஸ்லாமியர்களின் கைவேலையாகும்

சில இஸ்லாமியர்கள் “இந்த வசனங்கள் சொல்வது  நேரடி பொருளில் அர்த்தம் செய்யக்கூடாது” என்று கூறுகிறார்கள், அவர்கள் பற்றி இவர் சொல்லும் போது:

இப்படியாக கூறுவது என்பது பரிசுத்த குர்-ஆன் நேரடியாக மற்றும் வெளிப்படையாக கூறும் வசனத்தை புறக்கணிப்பது ஆகும், இதனை எந்த ஒரு முஸ்லிமும் செய்யமாட்டார்”[3].

இஸ்லாமின் படி, அல்லாஹ் தாம் படைத்த மனித வர்க்கத்தை தாமே அழிவிற்கு உள்ளாக்கினார். இப்படிப்பட்ட காரியத்தை யெகோவா தேவன் செய்யமாட்டார். நாம் தேவனை புறக்கணிக்க அவரே நமக்கு உரிமை கொடுத்துள்ளார், இது உண்மை தான்.  இப்படிப்பட்ட  உரிமையை தேவன் நமக்கு ஏன் கொடுத்தார்? என்று  பார்த்தால், மனித வர்க்கத்துக்கு சுயமாக முடிவு எடுக்கும் சுதந்திரத்தைக் கொடுத்து, அவர் நம்மை கனப்படுத்தியுள்ளார். இஸ்லாமில், நரகத்திற்குச் சென்று தண்டனை அனுபவிப்பதற்கு முன்பு, அல்லாஹ் சிலரை குரங்குகளாக, பன்றிகளாக மாற்றி தண்டனை கொடுத்துள்ளார்.  நாம் அவரை மறுக்கும் போது வேதனை அடையும் இறைவன், நம்மை மிருகங்களாக மாற்றுவானா?  மேலும் நாம் மரிப்பதற்கு முன்பாக  அவரை மறுபடியும் அங்கீகரிக்கலாம் அல்லவா? இதனை சிந்திக்காமல் நமக்கு இருக்கும் சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை பறிப்பது  எப்படி சரியானதாக இருக்கும்?  ஆனால், நான் நம்பியிருக்கும் தேவன் இப்படிப்பட்டவன் அல்ல.

நான் அறிந்துள்ள என் இறைவன், என்னுடைய நன்மைக்காகவே தண்டிப்பார் (எபிரேயர் 12:10, 1 கொரிந்தியர் 11:32).  நாம் பாவம் செய்வதினால் நமக்கு அதிக தீமை உண்டாகிறது என்பது உண்மையாகும். பாவம் செய்து தீய காரியங்களை நம் மீது நாமே கொண்டுவந்துவிடுகிறோம் (1 இராஜாக்கள் 8:32). இந்த காரியங்களும் நமக்கு இருக்கும் சுயமான முடிவு எடுக்கும் உரிமை மீதே ஆதாரப்பட்டுள்ளது. நம்முடைய சொந்த தீய முடிவுகள், நம்முடைய அழிவிற்கே காரணமாக இருக்கிறது. நாம் இப்படி நடந்துக்கொண்டாலும், தேவன் நம்மை சபிப்பதில்லை. அவர் தம்முடைய சாயலில் படைத்த படைப்பாகிய மனிதர்களை மிருகங்களாக மாற்றி தன் சாயலுக்கு தானே அவமானத்தை கொண்டு வருவதில்லை. ஆனால், இவை அனைத்தையும் அல்லாஹ் செய்கிறார்.

பைபிளின் யெகோவா தேவனுக்கும், குர்-ஆனின் அல்லாஹ்விற்கும் உள்ள வித்தியாசங்களில் இதுவும் ஒன்றாகும்.

பின் குறிப்புக்கள்:

[1] Sahih Bukhari, Volume 8, Book 74, Number 246. www.sahih-bukhari.com/Pages/Bukhari_8_74.php

[2] Ibn Kathir, downloaded from www.quran4u.com/Tafsir%20Ibn%20Kathir/PDF/002%20Baqarah%20I.pdf, p 199-200.

[3] islamkashmir.org/radiant-reality/2007/01/lesson-quran

ஆங்கில மூலம்: Created in the Image of God

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்