”ஆதி பாவம் (ஒரிஜினல் சின்)” என்றால் என்ன?

”ஆதி பாவம்” என்பதைப் பற்றி முஸ்லிம்கள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்கள். அதாவது ஆதி பாவம் என்றால், ஆதாம் செய்த அதே பாவத்தை நாம் செய்திருக்கிறோம் என்று அர்த்தமல்ல. உண்மையில், நாம் செய்கின்ற (நம் சொந்த) பாவங்களுக்காகத் தான் நாம் குற்றவாளிகளாக இறைவனுக்கு முன்பு நிற்கிறோம்.

ஆதாமும் ஏவாளும் தேவன் கொடுத்த கட்டளைக்கு கீழ்படியாமல், எப்போது மீறி நடந்தார்களோ, அப்போது ஒன்று நடந்தது, அது என்னவென்றால் “அவர்கள் தேவனைவிட்டு தூரமாகிவிட்டார்கள், பிரிந்துவிட்டார்கள்”. அதனால், தான் அவர்கள் ஏதோன் தோட்டத்திலிருந்து வேளியே அனுப்பிவிடப்பட்டார்கள். சரீர பிரகாரமாக (physical separation) ஆதாமும், ஏவாளும் தேவனைவிட்டு பிரிந்தார்கள், என்பது மட்டுமல்ல், அவர்கள் ஆவிக்குரிய விதத்திலும் (spiritual separation) பரிசுத்த தேவனை விட்டு பிரிந்துவிட்டார்கள். தூய்மையான மனநிலையுடன் படைக்கப்பட்ட மனிதன், தன் கீழ்படியாமையினால், கறைபடுத்தப்பட்டுவிட்டான். இதன் பிறகு அந்த ஆதாமுக்கு பிள்ளைகளாக பிறந்திருக்கும் நாம் அனைவரும், அதே பாவ மனநிலையுடன் தான் பிறக்கிறோம். இப்படி மனிதன் பாவ இயல்புடன் பிறப்பதினால் தான், அதனை ‘ஆதி பாவம் (ஒரிஜினல் சின்)’ என்று நாம் சொல்கிறோம்.

இப்படியெல்லாம் இல்லை என்று நீங்கள் மறுக்கலாம். அதாவது பிறக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பாவம் செய்ய ஈர்க்கப்படும் இயல்புடன் பிறப்பதில்லை என்று நீங்கள் சொல்லலாம். அப்படியென்றால், பிறக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்கள் மரணம் வரை ஒருமுறை கூட பாவம் செய்யமாட்டார்கள் என்று நீங்கள் சொல்வதாக அர்த்தமாகின்றது. இது உண்மைதானா? இது சாத்தியமா? நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள், அதாவது உலகில் இன்று வாழும் 700 கோடி மக்களில் அல்லது இதுவரை சரித்திரத்தில் வாழ்ந்தவர்களில் ”ஒருமுறைகூட பாவம் செய்யாமல், பரிசுத்தமாக வாழ்ந்த” ஒரே  ஒரு நபரையாவது கண்டுபிடித்துக் காட்டுங்கள். சரி, உங்களுக்கு தெரிந்தவர்களில் இப்படி பரிபூரண பரிசுத்தமாக வாழ்ந்த / வாழும் ஒரு நபரின் பெயராவது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் தந்தை, தாய், இமாம் அல்லது பாஸ்டர்? இவர்களில் யாராவது இந்த பட்டியலில் இடம் பெறமுடியுமா? அவர்களிடம் சென்று இதுவரை நீங்கள் ஒரு பாவமும் செய்யவில்லையா? என்று அவர்களிடமே கேட்டுப்பாருங்களேன்?

ஒருவேளை மதர் தெரேசா அவர்கள் உலகில் மிகவும் நல்லவர்களாக வாழ்ந்தவர்களாக நாம் கருதமுடியுமா? அவர்களிடமே இதனை கேட்டுப்பார்த்தால், அவர்கள் சொல்லுவார்கள் ‘பரிசுத்த நீதி தேவனுக்கு முன்பாக நான் ஒரு பாவி’ என்று.

பாவ பிடியிலிருந்து யாருமே தப்ப முடியாது. இந்த இயல்பு நாம் பிறந்த நாள் முதற்கொண்டு நம்மோடு இருக்கும். நாம் ஆதாமின் மகன்களாக மகள்களாக பிறக்கும் போதே, பாவத்தை செய்ய ஈர்க்கும் இயல்புடன் தான் பிறக்கிறோம்.

இப்போது கவனியுங்கள்! இதிலிருந்து விடுபட ஒரே ஒரு வழி தான் இருக்கிறது, அது என்னவென்றால் “மறுபடியும், புதிய ஆதாமாக நாம் பிறப்பது தான்”.

இது ஒரு பைத்தியக்காரத்தனமான பேச்சுபோல உங்களுக்குத் தோன்றும். ஆனால், இதனை விளக்கும் வசனத்தை நான் பைபிளிலிருந்து உங்களுக்கு காட்டுகிறேன். 

இவ்வசனங்களில் சொல்லப்பட்ட புதிய அல்லது கடைசி ஆதாம் இயேசு கிறிஸ்து ஆவார்.

அந்த பிரமீப்பூட்டும் வசன பகுதியை வாசிக்கும் போது, முதலாவது ஆதாம் தன் கீழ்படியாமையினால் எப்படி தோல்வி அடைந்தார் என்பதையும், கடைசி ஆதாமாகிய இயேசுக் கிறிஸ்து தம்முடைய கீழ்படிதலினால் எப்படி  வெற்றி அடைந்தார் என்பதையும் காணமுடியும்.

முதலாவது ஆதாமின் செயலினால்  நாம் பாவ சுபாவத்துடன் பிறக்கிறோம். இப்போது கடைசி ஆதாமினால் (இயேசுவினால்), ஒரு புதிய சுபாவத்துடன் பிறக்கிறோம், அதாவது முதலாவது மனிதனை தேவன் ஏதோன் தோட்டத்தில் படைத்த போது எந்த சுபாவத்துடன் இருந்தானோ (பாவமில்லாதவனாக),  அதே சுபாவத்துடன் நாம் இயேசுவில் மறுபடியும் பிறக்கிறோம்.

இயேசு நம்மை ரீபூட் (Reboot), ரீ-ஸ்டார்ட் (re-start) செய்ய வந்தார்,  அதாவது நம்மை மறுபடியும் புதிதாக்க வந்தார்.  இதைத் தான் ஆதாம் இழந்திருந்தார். தேவனுடைய இராஜ்ஜியத்தின் கதவுகளை திறந்து, நாம் தேவனோடு ஒப்புரவாக, இயேசு நம் ஆதிநிலையை திரும்ப நமக்கு கொடுத்தார் (அதாவது, நம்மை புதிய சுபாமுடைய மனிதர்களாக மாற்றினார்). ஒன்று மட்டும் நிச்சயம், இயேசு ஒருபோதும் நம்மை கட்டாயப்படுத்தமாட்டார்.

அதனால் தான், 2 கொரிந்தியர் 5:17 இப்படியாகச் சொல்கிறது:

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

நீங்களும் நானும் ஒரு முடிவை இப்போது எடுக்கவேண்டும்.

தெரிவு 1:

நாம் பிறந்த நாள் முதற்கொண்டு, மரிக்கும் நாள்வரையும், நாம் பழைய ஆதாமின் சுபாவத்துடனே வாழ்ந்துக்கொண்டு இருக்கலாம், அதன் விளைவாக, தேவனுடைய பிரசன்னத்திலிருந்து நாம் தள்ளிவிடப்படுவோம்.

அல்லது

தெரிவு 2:

நாம் இயேசுவிடம்  எங்கள் சுபாவத்தை ”Ctrl-Alt-Del” செய்து, ரீபூட் செய்யச்சொல்லலாம். இப்படி  நாம் புதிய சுபாவத்துடன் ரீபூட் செய்யப்பட்டால், இனிமேல் புதிய சிருஷ்டியாக வாழமுடியும்.

ஆங்கில மூலம்: WHAT IS ORIGINAL SIN?


ஃபெயித் ப்ரவுசர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்