முஸ்லிம்களுக்கு பிடித்த ஆனால் தவறாக புரிந்துக்கொண்ட பைபிள் வசனங்கள்: 1 - எண்ணாகமம் 23:19

நான் முஸ்லிம்களுடன் உரையாடல்களில் அல்லது விவாதங்களில் ஈடுபடும்போது, ஒரு சில பைபிள் வசனங்களை முஸ்லிம்கள் தவறாக புரிந்துக்கொண்டு அவைகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவதை காணமுடிகின்றது. முஸ்லிம்கள் எந்த நாட்டிலிருந்து பேசினாலும் சரி, இதே தவறை அவர்கள் செய்கிறார்கள்.  அவர்களுக்கு இந்த வசனங்களை தவறாகக் மேற்கோள் காட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டுவதை தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், எந்த வசனத்தை மேற்கோள் காட்டினாலும் சரி, அதனை நேர்மையாக புரிந்துக்கொண்டு வியாக்கீனம் செய்யவேண்டும். 

உலக முஸ்லிம்களுக்கு மிகவும் பிடித்த முக்கியமான 10 பைபிள் வசனங்களையும், அவைகளின் உண்மை அர்தத்தையும் சுருக்கமாக காண்போம். இவைகளில் முதல் வசனத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

முஸ்லிம்களுக்கு பிடித்த வசனம் வசனம் 1: எண்ணாகமம் 23:19  . . தேவன் ஒரு மனிதன் அல்ல . . .

பழைய ஏற்பாட்டின் இந்த வசனம் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கிறது என்று முஸ்லிம்கள் தவறாக கருதிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது கவனிக்கவேண்டியது என்னவென்றால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக தங்கள் வாதங்களுக்கு சான்றாக‌  முழு வசனத்தையும் மேற்கோள் காட்டுவதில்லை. இவர்கள் வசனத்தின் ஒரு பகுதியை மட்டுமே மேற்கோள் காட்டுவார்கள். 

இது இஸ்லாமிய விசுவாச அறிக்கையின் (ஷஹதாவின்) ஒரு பகுதியை மேற்கோள் காட்டுவதற்கு சமமாகும். ஷஹதாவிலிருந்து "இறைவன் இல்லை" என்ற ஒரு பகுதியை எடுத்துக் காட்டினால், இதனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஷஹதா இதைத் தான் போதிக்கின்றதா? இல்லையல்லவா?

முழு ஷஹதா என்ன சொல்கிறது: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை,  முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்

முஸ்லிம்களின் ஷஹதாவை முழுவதுமாக சொல்லாமல், "இறைவன் இல்லை" என்றுச் சொன்னால், ஷஹதாவின் முழு பொருள் புரியுமா?

அடுத்ததாக, முஸ்லிம்கள் தவறாக மேற்கோள் காட்டும் வசனத்தை முழுவதுமாக பார்ப்போம்.

எண்ணாகமம் 23:19. பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

இந்த வசனத்தின் உண்மை பொருள் என்ன?  மனிதனைப் போல பொய் சொல்வதற்கு தேவன் மனிதன் இல்லை என்பதைத் தானே இது சொல்கிறது?

மனிதன் வாக்கு கொடுத்தும் வாக்கு தவறுபவன், பொய் சொல்பவன், அவனை நம்பமுடியாது, ஆனால், தேவன் மனிதனைப்போல அல்லாமல், அவர் வாக்கு கொடுத்தால் நிச்சயம் செய்வார் என்பதை மிகவும் அழகாகச் சொல்கிறது இந்த வசனம்.

இதே வசனத்தை பொது மொழியாக்கத்தில் படியுங்கள்:

எண்ணாகமம் 23:19

தேவன் ஒரு மனிதனல்ல; அவர் பொய்ச் சொல்லமாட்டார். அவர் மானிடன் அல்ல. அவரது முடிவு மாறாதது. கர்த்தர் ஒன்றைச் செய்வதாகக் கூறினால் அவர் அதனை நிச்சயம் செய்வார். கர்த்தர் ஒரு வாக்குறுதி தந்தால் அந்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார்.

இதே விஷயத்தை இன்னொரு வசனத்திலும் காணலாம்:

I சாமுவேல் 15:29. இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், மனிதனுக்கு இருக்கும் ஒரு குணம் "தேவைப்படும்போது பொய் சொல்வது", இது போன்ற ஒரு குணம் தேவனுக்கு இல்லை என்பது தான்.

முஸ்லிம்களின் தவறான புரிதல்: 

பொய் சொல்வதற்கு தேவன் மனிதனைப் போன்றவர் அல்ல என்று வசனம் சொல்லியிருக்கும்போது, "தேவன் மனிதனாக வரமாட்டார்" என்று முஸ்லிம்கள் பொருள் கூறுகிறார்கள். இது அறியாமையா? அல்லது வேண்டுமென்றே தெரிந்தே செய்யும் வஞ்சகமா? வசனம் சொல்லாத ஒன்றை சொன்னதாக முஸ்லிம்கள் கருதுகிறார்கள், இது தவறு.

அடுத்த கட்டுரையில் முஸ்லிம்கள் தவறாக பொருள் கூறும் இன்னொரு வசனத்தை ஆய்வு செய்வோம்.

இந்த கட்டுரைக்கு உதவிய ஆக்கில கட்டுரை: http://www.faithbrowser.com/top-10-misinterpreted-verses-by-muslims/


ஃபெயித் ப்ரவுசர்(Faith Browser) கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்