சிலுவைப்போர் என்றால் என்ன? அவைகள் தொடங்கப்பட காரணங்கள் யாவை? பாகம் 2

சிலுவைப் போர்கள் (குருசேட்ஸ்) என்றால், கி.பி. 11வது நூற்றாண்டின் கடைசியிலிருந்து, 13வது நூற்றாண்டு வரை ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளாகும் அல்லது போர்களாகும்.  

புனித நகரமாக கருதப்பட்ட  எருசலேம் நகரையும், இதர புனித இடங்களையும் முஸ்லிம் ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டுக்கொள்ளவும், முஸ்லிம் ஆக்கிரமிப்புக்களுக்கு தடை போடவும் இந்த போர்கள் நடத்தப்பட்டன‌.

சிலுவைப்போர்கள் பற்றி கலைக்களஞ்சிய தளங்களிலிருந்து மேற்கோள்கள்:

1) Brittanica Encyclopedia

Crusades, military expeditions, beginning in the late 11th century, that were organized by western European Christians in response to centuries of Muslim wars of expansion. Their objectives were to check the spread of Islam, to retake control of the Holy Land in the eastern Mediterranean, to conquer pagan areas, and to recapture formerly Christian territories; they were seen by many of their participants as a means of redemption and expiation for sins. Between 1095, when the First Crusade was launched, and 1291, when the Latin Christians were finally expelled from their kingdom in Syria, there were numerous expeditions to the Holy Land, to Spain, and even to the Baltic; the Crusades continued for several centuries after 1291. Crusading declined rapidly during the 16th century with the advent of the Protestant Reformation and the decline of papal authority.

Approximately two-thirds of the ancient Christian world had been conquered by Muslims by the end of the 11th century, including the important regions of Palestine, Syria, Egypt, and Anatolia. The Crusades, attempting to check this advance, initially enjoyed success, founding a Christian state in Palestine and Syria, but the continued growth of Islamic states ultimately reversed those gains. By the 14th century the Ottoman Turks had established themselves in the Balkans and would penetrate deeper into Europe despite repeated efforts to repulse them.

2) Ancient History Encyclopedia

The Crusades were a series of military campaigns organised by Christian powers in order to retake Jerusalem and the Holy Land back from Muslim control. There would be eight officially sanctioned crusades between 1095 CE and 1270 CE and many more unofficial ones. Each campaign met with varying successes and failures but, ultimately, the wider objective of keeping Jerusalem and the Holy Land in Christian hands failed.

மூலம்: https://www.ancient.eu/article/1249/the-crusades-causes--goals/

சிலுவைப் போர்கள் ஏன் தொடங்கப்பட்டன?

சிலுவைப்போர்கள் என்றுச் சொன்னாலே, முஸ்லிம்கள் கோபம் கொள்வார்கள்.  கிறிஸ்தவர்கள் செய்தது தவறு என்பார்கள். முஹம்மது மரித்த பிறகு, முஸ்லிம்கள் உலகம் அனைத்திற்கும் சென்று அமைதியான முறையில் இஸ்லாமை பரப்பியது போல நினைத்து இன்றுள்ள முஸ்லிம்கள் பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் புரிந்த போர்கள், செய்த கொலைகள், சிந்திய இரத்தம், அழித்த தேவாலயங்கள் போன்றவற்றிற்கு அளவே இல்லை.  

கத்தோலிக்க போப் முதன் முதலாக சிலுவைப்போர் பற்றி அறிவிப்பு கொடுப்பதற்கு முன்பு என்ன நடந்தது?  சிலுவைப்போர்களின்  ஆணிவேர் எது? என்று சரித்திர ஏடுகளை படிக்கும் போது, முஸ்லிம்களின் மண்ணாசையும், பொருளாசையும் தான் காரணம் என்பதை அறிய முடியும். 

ஏன் சிலுவைப்போர்கள் தொடங்கப்பட்டன என்ற கேள்விக்கு பதில் எங்கு கிடைக்கும்? முஹம்மது மரித்த ஆண்டிலிருந்து முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஆட்சி புரிந்துக்கொண்டு இருந்த நாடுகளில் புரிந்த போர்களைப் ஆய்வு செய்தால் பதில் கிடைக்கும். ஒரு வரியில் பதில் சொல்வதானால், 400 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டிருந்த கிறிஸ்தவ நாடுகள், மிகவும் காலதாமதமாக‌ தொடுத்த எதிர் போர் தான் சிலுவைப்போர்கள்.

முஹம்மதுவின் கடைசி காலம் கி.பி. 630 முதல்  1095ம் ஆண்டு வரையுள்ள பட்டியல்:

(சிகப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை சிறிது அதிக கவனம் செலுத்தி படிக்கவும். புனிதப்போர் என்ற ஒன்றை கிறிஸ்தவர்களுக்கு அறிமுகம் செய்து, போர் செய்யத்தூண்டியதே முஸ்லிம்கள் என்பதால் அவர்களை இந்த பட்டியலில் 'முஸ்லிம் குருசேடர்கள்' என்று குறிப்பிட்டுள்ளேன்.) 

கி.பி. 630ம் ஆண்டு (முஹம்மது மரிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) முஹம்மது தன் இஸ்லாமிய குருசேடர்களுடன் தபூக் என்ற இடத்திற்கு போருக்குச் சென்றார். அவர் 30,000 ஜிஹாதிகளுடன் பைஜாண்டைன் கிறிஸ்தவர்களோடு சண்டையிட தபூக் என்ற இடம்வரைக்கும் சென்றார். தன்னுடன் போர் புரிய பைஜாண்டைன் அரசன் இராணுவத்துடன் வருகிறார் என்ற வதந்தியை முஹம்மது நம்பி இப்படி மிகபெரிய இராணுவத்துடன் சென்றார். பைஜாண்டைன் இவரோடு சண்டையிட வரவே இல்லை. இதனால், முஹம்மது திரும்பிச் சென்றுவிட்டார். 

கி.பி. 632 – 634: அபூ பக்கர் அவர்கள் கலிஃபாவாக இருந்தார். இவர் தன்னுடைய முஸ்லிம் குருசேடர்களின் உதவியுடன், அரேபியா பகுதியில் இருந்த அனேக சிற்றரசர்களிடம் போரிட்டு, அவர்களை மறுபடியும் இஸ்லாமிய ஆட்சிக்குள் கொண்டுவந்தார். முஹம்மது மரித்தவுடன், அனேகர் இஸ்லாமை விட்டு வெளியே சென்றனர், ஜிஸ்யா வரி கட்ட மறுத்தனர். அபூபக்கர் போர் புரிந்து மறுபடியும் எல்லோரையும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்.

கி.பி. 633: காலித் அல்வாலித் என்பவரின் தலைமையில் முஸ்லிம் குருசேடர்கள் உல்லேஸ் என்ற பட்டணத்த பிடித்தார்கள்.  முஹம்மது காலித் அல்வாலித்தை "அல்லாஹ்வின் வாள்" என்று அழைப்பதுண்டு (தபரி 8:158/1616-17). இந்த காலித் அல்வாலித் ஒரு கால்வாயில் அனேகரை கொன்று அவர்களின் இரத்தத்தை சிந்தினார், அந்த கால்வாயில் இரத்தம் ஓடியது, அதனை இரத்தக் கால்வாய் என்று அழைத்தனர் (Blood Canal) (தபரி 11:24 / 2034-35)

கி.பி. 634-644 உமர் இப்னு அல் கத்தாப், கலிஃபாவாக இருந்தார், இவர் மிகவும் கொடூரமானவராக கருதப்படுகிறார்.

கி.பி. 635 இஸ்லாமிய குருசேடர்கள் தமாஸ்கஸ் நாட்டை ஆக்கிரமித்தார்கள். 

கி.பி. 636 முஸ்லிம் குருசேடர்கள் பைஜாண்டைன்ஸை ஆக்கிரமித்தார்கள் (யர்முக் யுத்தம்)

கி.பி. 637 முஸ்லிம் குருசேடர்கள் ஈராக்கை ஆக்கிரமித்தார்கள் (அல் கதிஸிய்யா யுத்தம், 635 அல்லது 636)

கி.பி. 638 முஸ்லிம் குருசேடர்கள் எருசலேமை முற்றுகையிட்டு, பைஜாண்டைன்ஸிடமிருந்து எருசலேமை ஆக்கிரமித்தார்கள். (638 Muslim Crusaders conquer and annex Jerusalem, taking it from the Byzantines.)

கி.பி. 638-650 முஸ்லிம் குருசேடர்கள் ஈரானை ஆக்கிரமித்தார்கள் (காஸ்பியன் கடலோர பகுதிகளைத் தவிர)

கி.பி. 639-642 முஸ்லிம் குருசேடர்கள் எகிப்தை ஆக்கிரமித்தார்கள். 

கி.பி. 641 முஸ்லிம் குருசேடர்கள் சிரியா மற்றும் பாலஸ்தீனாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள்.

கி.பி. 643-707 முஸ்லிம் குருசேடர்கள் வட ஆஃப்ரிக்காவை ஆக்கிரமித்தார்கள்.

கி.பி. 644 கலிஃப் உமர் அவர்கள் பெர்சிய அடிமையினால் கொல்லப்பட்டார். உஸ்மான் மூன்றாவது கலிஃபாவாக நியமிக்கப்பட்டார். உமரை விட உஸ்மான் கொஞ்சம் நல்லவர் என்று கருதப்படுகிறார்.

கி.பி. 644-650 முஸ்லிம் குருசேடர்கள் சைப்ரஸ் நாட்டையும், வட  ஆஃப்ரிக்காவில் உள்ள ட்ரிபோலி நாட்டையும், பிடித்தார்கள். மேலும், ஈரான், ஆப்கானிஸ்தான், மற்றும் சிந்துவில் இஸ்லாமிய ஆட்சியை அமைத்தார்கள்.

கி.பி. 656 கலிஃபா உஸ்மான் அவர்கள் ஒரு இஸ்லாமிய இராணுவரால் கொல்லப்பட்டார். அடுத்த கலிஃபாவாக அலி அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர் முஹம்மதுவின் மருமகன் ஆவார்.

கி.பி. 656 "ஒட்டகப்போர்" என்ற போரில் முஹம்மதுவின் மனைவி ஆயிஷா அவர்கள், அலியுடன் போரிட்டார்கள். இதில் அலி அவர்கள் வெற்றிப் பெற்றார்கள்.

கி.பி. 657 எருசலேமின் கவர்னருக்கும், அலிக்கும் இடையே "சிப்பின் யுத்தம்" என்ற போர் நடந்தது.

கி.பி. 661 அலி அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அலியின் ஆதரவாளர்கள் அலியின் மகனாகிய ஹுசேன் அடுத்த கலிஃபாவாக வரவேண்டும் என்று விரும்பினர். ஆனால், அவர் முஅவிய்யாஹ் 1  என்பவரோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.

கி.பி. 661-680 முஅவிய்யாஹ் அடுத்த கலிஃபா ஆனார்.  இவர் உமய்யித் ராஜவம்சத்தை ஸ்தாபித்தார் மேலும் தலைநகரை மதினாவிலிருந்து தமாஸ்கஸ்ஸுக்கு மாற்றினார்.

கி.பி. 673-678 அரபியர்கள் பைஜாண்டன் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர் கான்ஸ்டானொபிலை பிடித்தார்கள் (Arabs besiege Constantinople, capital of Byzantine Empire)

கி.பி. 680 முஹம்மதுவின் பேரன் ஹுசேனும், அவரது குடும்பம், மற்றும் ஆதாரவாளர்கள் ஈராக்கின் கர்பலா என்ற இடத்தில் கொல்லப்பட்டனர்.

கி.பி. 691 எருசலேமின் பெரிய கோபுரம் அமைக்கப்பட்டு முடிவுபெற்றது. முஹம்மதுவின் மறைவிற்கு பிறகு 60 ஆண்டுகளில் இது நடந்தது. (Dome of the Rock is completed in Jerusalem, only six decades after Muhammad's death.)

கி.பி. 705 அப்த் அல் மாலிக் உம்மாயித் சாம்ராஜ்ஜியத்தை மறுபடியும் புதுப்பித்தார்.

கி.பி. 710-713 முஸ்லிம் குருசேடர்கள் இந்தஸ் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்தார்கள் (lower Indus Valley).

கி.பி. 711-713 முஸ்லிம் குருசேடர்கள் ஸ்பெயின் நாட்டை ஆக்கிரமித்தார்கள். அங்கு அந்தலுஸ் ஆட்சியை அமைத்தார்கள். 

[முஸ்லிம்கள் ஸ்பெயின் நாட்டை விட்டு விரட்டப்பட்டு 700 ஆண்டுகள் ஆகியும், இந்த முஸ்லிம்கள் இன்னும் அதனை நினைத்து துக்கம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதனை விளக்கும் கட்டுரை இதுவாகும். ஸ்பெயின் தங்களுடைய சொந்த நாடு என்று இவர்கள் நினைக்கிறார்கள். (This article recounts how Muslims today still grieve over their expulsion 700 years later. They seem to believe that the land belonged to them in the first place.)]

கி.பி. 719 கொர்டொவா, ஸ்பெயின் அரபியர்களின் ஆளுகையின் கீழ் வந்தது. (Cordova, Spain, becomes seat of Arab governorship).

கி.பி. 732 பொய்டியர்ச் யுத்தத்தில் முஸ்லிம் குருசேடர்கள் தடுக்கப்பட்டார்கள். பிரான்ஸ் அரபிய விஸ்தரிப்பை தடுத்துவிட்டது.

கி.பி. 749 அப்பாஸித்கள் குஃபாவை பிடித்தார்கள், உம்மயித்களின் ஆட்சியை கவிழ்த்தார்கள்.

கி.பி. 756 உம்மயித் தனி அரசாட்சியாக அமைக்க கொர்டொவா, ஸ்பெயின் நாடுகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டது.

கி.பி. 762 பாக்தாத் ஸ்தாபிக்கப்பட்டது.

கி.பி. 785 கொர்டொவாவில் மிகப்பெரிய மசூதி அமைக்கப்பட்டது.

கி.பி. 789 மொரொக்கோவில் முஸ்லிம் குருசேடர்கள் (இத்ரிசித்கள்) உருவாகினார்கள். இஸ்லாமியராக இருந்து கிறிஸ்தவராகிய மாறிய கிற்ஸ்டொஃபொரஸ் என்பவர் தூக்கிலிடப்பட்டார். (Christoforos, a Muslim who converted to Christianity, is executed.)

கி.பி. 800 அக்லபித் ராஜ்ஜியம் துனிசியாவில் முஸ்லிம் குருசேடர்களால் உருவானது.

கி.பி. 807 கலிஃப் ஹாருன் அல் ரஷீத் என்பவர், எருசலேமில் உள்ள இஸ்லாமியரல்லாத ஜெப வீடுகள், மற்றும் சர்ச் ஆஃப் மக்தலேனா மரியாள் திருச்சபையை அழிக்கும் படி கட்டளையிட்டார். (Caliph Harun al-Rashid orders the destruction of non-Muslim prayer houses and of the Church of Mary Magdalene in Jerusalem.)

கி.பி. 809 அக்லபித் முஸ்லிம் குருசேடர்கள் சர்தினியா, இத்தாலியை ஆக்கிரமித்தார்கள்.

கி.பி. 813 பாலஸ்தீனாவில் உள்ள கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள், அனேகர் நாட்டை விட்டு ஓடிப்போனார்கள்.

கி.பி. 831 முஸ்லிம் குருசேடர்கள் இத்தாலின் பாலேமோவை கைப்பற்றினார்கள், இத்தாலியின் தென் பகுதியை கொள்ளையிட்டார்கள்.

கி.பி. 850 கலிஃப் அல் மடவக்கில் இஸ்லாமியரல்லாத ஜெப வீடுகளை அழிக்கும் படி கட்டளையிட்டார்.

கி.பி. 855 சிரியாவில் (ஹிம்ஸ்) கிறிஸ்தவர்கள் மத்தியிலே ஒரு கிளர்ச்சி எழும்பியது.

கி.பி. 837-901 அக்லபித்ஸ் இஸ்லாமிய குருசேடர்கள் சிசிலியை கைப்பற்றினார்கள், கொர்சிகா, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளை கொள்ளையிட்டார்கள் (Aghlabids (Muslim Crusaders) conquer Sicily, raid Corsica, Italy, France.)

கி.பி. 869-883 ஈராக்கில் கருப்பு இன அடிமைகள் மத்தியிலே ஒரு கிளர்ச்சி எழும்பியது. (Revolt of black slaves in Iraq)

கி.பி. 909 துனிசியாவில் ஃபதிமத் என்ற இஸ்லாமிய குருசேடர்கள் எழும்பினார்கள். இவர்கள் சிசிலி, சர்டினியாவை கைப்பற்றினார்கள்.

கி.பி. 928-969 பைஜாண்டையில் இராணுவ எழுச்சி உண்டானது, அவர்கள் தங்களின் பழைய பகுதிகளை பிடித்துக்கொண்டார்கள். (Byzantine military revival, they retake old territories, such as Cyprus (964) and Tarsus (969).)

கி.பி. 937 ஒரு கொடூரமான இஸ்லாமிய தலைவர், ரோமனஸ் கவர்னருக்கு கடிதம் எழுதினார். புனித ஸ்தலங்கள் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்று பெருமையடித்துக் கொண்டார். (The Ikhshid, a particularly harsh Muslim ruler, writes to Emperor Romanus, boasting of his control over the holy places.)

கி.பி. 937 உயிர்தெழுதலின் சபை என்ற பெயர் கொண்ட சபை முஸ்லிம்களால் தீயிக்கு இறையாக்கப்பட்டது. எருசலேமின் அனேக திருச்சபைகள் தாக்கப்பட்டன. (The Church of the Resurrection (known as Church of Holy Sepulcher in Latin West) is burned down by Muslims; more churches in Jerusalem are attacked.)

கி.பி. 960 கராகனித் துருக்கிகள் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டார்கள். 

கி.பி. 966 எருசலேமின் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலகங்கள் எழும்பின. (Anti-Christian riots in Jerusalem)

கி.பி. 969 ஃபதிமித் இஸ்லாமிய குருசேடர்கள் எகிப்தை கைப்பற்றினார்கள், கெய்ரோவை ஸ்தாபித்தார்கள்.

கி.பி. 970 செல்ஜுக்ஸ் என்பவர்கள் கிழக்கு பகுதியிலிருந்து இஸ்லாமிய பகுதிகளில் நுழைந்தார்கள்.

கி.பி. 973 சிரியாவும், இஸ்ரவேலும் ஃபதிமித்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

கி.பி. 1003 அல் ஹகீம் முதலாவதாக கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். எகிப்தில் உள்ள பரிசுத்த மாற்கு திருச்சபை அழிக்கப்பட்டது. 

கி.பி. 1009 அல் ஹகீம் என்பவரால் உயிர்த்தெழுதல் சபை அழிக்கப்பட்டது. (Destruction of the Church of the Resurrection by al-Hakim (see 937))

கி.பி. 1012 அல் ஹகீம் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கொடுமைப்படுத்த கட்டளைகளை கொடுத்தார்.(Beginning of al-Hakim's oppressive decrees against Jews and Christians)

கி.பி. 1015 பாலஸ்தீனாவில் பூமியதிர்ச்சி உண்டானது. இஸ்லாமியர்கள் கட்டிய டூம் ஆஃப் ராக், விழுந்தது. (Earthquake in Palestine; the dome of the Dome of the Rock collapses.)

கி.பி. 1031 உம்மாயித் கலிஃபா ராஜ்ஜியம் உடைந்துவிட்டது, 15 தனித் தனி இராஜ்ஜியங்களாக் பிரிந்தது. 

கி.பி. 1048 உயிர்த்தெழுதலின் திருச்சபை மறுபடியும் கட்டப்பட்டு முழுமைப்பெற்றது (Reconstruction of the Church of the Resurrection completed)

கி.பி. 1050  அல்மொரவித் (முஸ்லிம் குருசேடர்கள்) இயக்கம் மௌரேடானியாவில் உருவாகியது. இஸ்லாமியர்கள் குர்-ஆன், ஹதீஸ் மற்றும் மாலிகி சட்டத்தில் அதிக கவனம் செலுத்தினார்கள் (Creation of Almoravid (Muslim Crusaders) movement in Mauretania; Almoravids (also known as Murabitun) are coalition of western Saharan Berbers; followers of Islam, focusing on the Quran, the hadith, and Maliki law.)

கி.பி. 1055 செல்ஜுக் இளவரசர் தக்ரூல் பாக்தாதை பிடித்தார், தன் இராஜ்ஜியத்தில் பாக்தாத்தை இணைத்துக்கொண்டார்.

கி.பி. 1055 உயிர்த்தெழுதலின் சபை என்ற திருச்சபையின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டது (Confiscation of property of Church of the Resurrection)

கி.பி. 1071 மஞ்சிகெர்ட் யுத்தம், செல்ஜுக் துருக்கிகள்(முஸ்லிம் குருசேடர்கள்) பைஜாண்டனை தோற்கடித்து, அனடோலியாவில் அதிகமான இடங்களை கைப்பற்றிக்கொண்டனர்.

கி.பி. 1071  துருக்கிகள் (முஸ்லிம் குருசேடர்கள்) பாலஸ்தீனாவை ஆக்கிரமித்தார்கள்.

கி.பி. 1075 செல்ஜுக் முஸ்லிம் குருசேடர்கள் நைசியாவை ஆக்கிரமித்து, அனடோலியாவிற்கு தலைநகரமாக்கினார்கள்.

கி.பி. 1076 அல்மொரவித்கள் (முஸ்லிம் குருசேடர்கள்) கானா மேற்கு பகுதியை ஆக்கிரமித்தார்கள் (Almoravids (Muslim Crusaders) (see 1050) conquer western Ghana.)

கி.பி. 1085 டொலெடோ கிறிஸ்தவ இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது. (Toledo is taken back by Christian armies.)

கி.பி. 1086 அல்மொரவித்கள் (முஸ்லிம் குருசேடர்கள்) அந்தலுஸ் என்பவருக்கு உதவி புரிந்தார்கள் (Almoravids (Muslim Crusaders) (see 1050) send help to Andalus, Battle of Zallaca.)

கி.பி. 1090-1091 அல்மொரவித்கள் (முஸ்லிம் குருசேடர்கள்) அந்தலுஸ் அனைத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டார்கள். (சரகோசா மற்றும் சில தீவுகளைத் தவிர) 

கி.பி. 1094 பைஜாண்டைன்ஸின் ஆளுநர், அலேக்சியஸ் காம்னெனஸ் 1, மேற்கில் உள்ள கிறிஸ்தவர்களிடம் உதவி கேட்டார். தன்னுடைய இராஜ்ஜியத்தை செல்ஜுக் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த செல்ஜுக்ஸ் என்பவர்கள் துருக்கி முஸ்லிம்களாக இருந்தார்கள் (பார்க்க 970). 

Byzantine Emperor Alexius Comnenus I asks western Christendom for help against Seljuk invasions of his territory; Seljuks are Muslim Turkish family of eastern origins; see 970.

கி.பி. 1095 போப் அர்பன் 2, சிலுவைப்போர் பற்றி முதல் பிரசங்கம் செய்தார், மற்றும் இவர்கள் 1099ம் ஆண்டு எருசலேமை கைப்பற்றினார்கள்.(1095 Pope Urban II preaches first Crusade; they capture Jerusalem in 1099)

ஆக, இஸ்லாமியர்களின் அனேக ஆக்கிரமிப்பிற்கு கொடுமைகளுக்கு பிறகு தான் மேற்கத்திய கிறிஸ்தவர்கள் முதல் சிலுவைப்போரை துவக்கினார்கள்.

அடுத்த கட்டுரையில், மேற்கண்ட விவரங்களை வரைபடங்கள் மூலமாக இன்னும் தெளிவாக புரியும் வண்ணம் காண்போம்.

இந்த கட்டுரைக்கு உதவிய தமிழ் கட்டுரை:

முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)

தேதி: டிசம்பர் 15, 2019


ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர்கள் - பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்