2016 பக்ரீத் – 4: முஸ்லிம்களின் மலைபோன்ற பாவசுமைகளை சுமக்கும் யூத கிறிஸ்தவர்கள்

முந்தைய தொடர் கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்புக்களில் படிக்கலாம்:

  1. அல்லாஹ்விற்கு ஏன் பலியும் இரத்தமும் தேவைப்பட்டது?
  2. ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்கமுடியாது ஆனால் முடியும் – குர்-ஆனின் குழப்பம்
  3. கியாமத் நாளின் சுமை பரிமாற்றங்கள் பற்றி பிஜே

தற்போதைய கட்டுரையில், அல்லாஹ் எப்படி ஒரு பிரிவு மக்களின் பாவசுமைகளை எடுத்து, இன்னொரு பிரிவு மக்களின் மீது சுமத்துகிறார் என்பதை ஹதீஸ்களின் உதவியுடன் காண்போம்.  முதல் பிரிவின் மலைபோன்ற  சுமைகள் இடமாற்றம் செய்யப்பட்டபடியினால், அவர்களை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிக்கிறார். இந்த விவரம் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.

1) முஸ்லிம்களின் பாவசுமைகளை டவுன்லோட் செய்து, யூத கிறிஸ்தவர்கள் மீது  அப்லோட் செய்யும் அல்லாஹ்

அ) முஸ்லிம்களின் பாவங்களை சுமக்கும் யூத கிறிஸ்தவர்கள்:

மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்களாம். அந்த மலைபோன்ற பாவசுமைகளை முஸ்லிம்களிடமிருந்து எடுத்து, அவைகளை யூதர்கள் மீதும் கிறித்தவர்கள் மீதும் வைத்து, அல்லாஹ் அந்த முஸ்லிம்களை சொர்க்கத்தில் அனுமதிப்பானாம்.

சஹீஹ் முஸ்லிம் நூல், எண்:5344

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள் மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான். இவ்வாறே நான் கருதுகிறேன். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூரவ்ஹ் ஹரமீ பின் உமாரா (ரஹ்) அவர்கள், "இவ்வாறே நான் கருதுகிறேன் எனும் ஐயப்பாட்டைத் தெரிவித்த அறிவிப்பாளர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார்கள்.

அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற (அவர்களுடைய புதல்வரான) அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், "இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தா உம்முடைய தந்தை அறிவித்துள்ளார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "ஆம்" என்றேன்.  Book :49

ஆ) முஸ்லிம்களை நரகத்திலிருந்து விடுவிக்கும் யூத கிறிஸ்தவ இரட்சகர்கள்:

மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடம் அல்லாஹ் ஒரு யூதனையோ, அல்லது கிறிஸ்தவனையோ கொண்டு வந்து, "இவன் தான் உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான்" என்று சொல்லுவானாம். என்னே! ஒரு பாக்கியம் முஸ்லிம்களுக்கு! நீங்கள் எப்படிப்பட்ட பாவங்களை பூமியில் செய்தாலும், அவைகள் மலைபோன்று காணப்பட்டாலும், உங்களுக்கு பிரச்சனையே இல்லை, ஏனென்றால், கியாமத் நாளில் உங்களை விடுவிக்கும் யூத மற்றும் கிறிஸ்தவ இரட்சகர்கள் இருக்கிறார்களே!

சஹீஹ் முஸ்லிம் நூல், எண்:5342

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, "இவன்தான் உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான்" என்று சொல்வான். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  Book :49

இ) முஸ்லிம்களின் ஸ்தானத்தில் நரகத்திற்குச் செல்லும் யூத கிறிஸ்தவர்கள்

ஒரு முஸ்லிம் மரிக்கும் போது, அவருக்கு நரகம் நிச்சயமாக கிடைக்குமாம். ஆனால், அந்த முஸ்லிமுக்காக  அல்லாஹ்வினால் ஆயத்தமாக்கப்பட்ட நரகத்தின் இடத்திற்கு, அந்த முஸ்லிமை அனுப்பாமல், அந்த இடத்திற்கு ஒரு யூதனையோ, கிறிஸ்தவனையோ அல்லாஹ் அனுப்பிவிடுவானாம். இதன் மூலமாக, அந்த முஸ்லிம் சொர்க்கம் செல்வானாம் . ஆனால், அந்த யூதன் அல்லது கிறிஸ்தவன், முஸ்லிமின் நரக டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, நரகத்திற்குச் சென்று வேதனையை அனுபவிப்பானாம். இது தான் இஸ்லாம் சொல்லும் நரக இறையியல்.

சஹீஹ் முஸ்லிம் நூல், எண்:5343

அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

 "ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தம் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள் என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தார்கள்.

அப்போது உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவனில்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீது சத்தியமாக! இதை உம்முடைய தந்தை (அபூமூசா (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக உம்மிடம் கூறினார்களா?" என்று மூன்று முறை கேட்டார்கள். அபூபுர்தா (ரஹ்) அவர்கள், அவ்வாறே சத்தியமிட்டுக் கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அபூபுர்தா (ரஹ்) அவர்களைச் சத்தியமிட்டுக் கூறச் சொன்னதாக சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் என்னிடம் அறிவிக்கவில்லை. ஆனால், அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அவ்வாறு அறிவித்தபோது, அதற்கு சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. Book :49

ஈ) பெரும் கொடிய பாவங்களை செய்த முஸ்லிம்களின் சுமையை சுமக்கும் யூத கிறிஸ்தவர்கள்.

நாம் பார்க்கப்போகும் அடுத்த விவரம் “ஹதீஸ் குத்ஸி” என்ற பிரிவைச் சேர்ந்தது. குத்ஸி என்றால் பரிசுத்தமானது என்று அர்த்தம்.  ஹதீஸ் தொகுப்புகளில், ‘அல்லாஹ் பேசுவதாக இருக்கும் ஹதீஸ்களை’ இஸ்லாமிய அறிஞர்கள் பரிசுத்தமான ஹதீஸ்கள் என்று வகை பிரிக்கின்றனர், இதைப் பற்றி இஸ்லாமிய தளங்களில் நீங்கள் படிக்கலாம். தற்போது நாம் பார்க்கும் விவரம், ஒருவரின் பாவத்தை இன்னொருவர் சுமப்பது பற்றியதாகும். இந்த ஹதீஸ் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்து கீழே கொடுத்துள்ளேன். 

அபூ மூஸா அறிவித்தது.

அல்லாஹ்வின் தூதர் சொன்னதாவது: உயிர்த்தெழுதலின் நாளில், என் உம்மா (முஸ்லிம்கள்) முன்று பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள். ஒரு பிரிவு முஸ்லிம்கள், அவர்களின் செயல்களுக்கான எந்த கணக்கு வழக்கு கொடுக்கப்படாமல், சொர்க்கத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாவது பிரிவு முஸ்லிம்கள், தங்கள் செயல்களுக்காக சிறிய அளவில் கணக்கு கேட்கப்பட்டு, சொர்க்கத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், மூன்றாவது பிரிவு முஸ்லிம்கள், தங்கள் முதுகுகளில் பெரிய மலைகள் அளவு பாவ சுமைகளை சுமந்தவர்களாக வருவார்கள். அல்லாஹ்விற்கு எல்லாம் தெரிந்திருந்தும், இவர்கள் யார் என்று அல்லாஹ் தூதர்களிடம் கேட்பான். அவர்கள், “இவர்கள் உன்னுடைய தாழ்மையான அடியார்கள் என்று” பதில் சொல்வார்கள். அதற்கு அல்லாஹ், “இவர்களிடமிருந்து அந்த பாவசுமைகளை எடுத்து, அவைகளை அப்படியே யூத கிறிஸ்தவர்கள் மீது வையுங்கள்” என்றுச் சொல்லுவான். மேலும், என்னுடைய அருளால், அந்த முஸ்லிம்களை சொர்க்கத்துக்கு அனுப்புங்கள் என்றும் சொல்லுவான். 

Narrated Abu Musa: Allah’s Messenger said: On the Day of Resurrection, my Ummah (nation) will be gathered into three groups. One sort will enter Paradise without rendering an account (of their deeds). Another sort will be reckoned an easy account and admitted into Paradise. Yet another sort will come bearing on their backs heaps of sins like great mountains. Allah will ask the angels though He knows best about them: Who are these people? They will reply: They are humble slaves of yours. He will say: Unload the sins from them and put the same over the Jews and Christians: then let the humble slaves get into Paradise by virtue of My Mercy. 

(This Hadith IS SOUND and mentioned in Mustadrak of Hakim). (110 Hadith Qudsi (Sacred Hadith), translated by Syed Masood-ul-Hasan, revision and commentaries by Ibrahim m. Kunna [Darussalam Publishers and Distributors], pp. 19-20;

மிகப்பெரிய கொடிய பாவங்களைச் செய்த முஸ்லிம்களின் பாவசுமைகளை எடுத்து, யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ் சுமத்துவானாம்.

2) ஹதீஸ் முஸ்லிம் எண்கள்: 5344, 5342 & 5343, மற்றும் ஹதீஸ் குத்ஸி - சிறிய ஆய்வு

நாம் முந்தைய தொடர்களில் ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமப்பது பற்றிய இஸ்லாமிய கோட்பாடுகளை பார்த்தோம்.

முதலாவதாக, ஆபிரகாமின் மகன் விஷயத்தில், அவருக்கு பதிலாக அல்லாஹ் ஒரு ஆட்டை பலியாக்கி அவரை மீட்டார் என்பதை குர்‍ஆனிலிருந்து பார்த்தோம். இரண்டாவதாக, முஸ்லிம்களை வழிகெடுக்கும் மக்கள் மீது, அந்த வழிகெடுக்கப்பட்டவர்களின் பாவங்களையும் அல்லாஹ் சுமத்துவதை குர்‍ஆனிலிருந்து பார்த்தோம். மூன்றாவதாக, சஹீஹ் என்று முஸ்லிம்கள் கருதும் ஹதீஸிலிருந்து இன்னொரு உதாரணத்தையும் இப்போது பார்த்துள்ளோம். அதாவது மறுமை நாளில் முஸ்லிம்களின் இரட்சகர்களாக யூதர்களும் கிறிஸ்தவர்களும் இருப்பார்கள்.

மேற்கண்ட ஹதீஸ்கள் ஒரே விஷயத்தை பலவகையாகச் சொல்கிறது. இவைகளை படிக்கும் போது நமக்கு கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன! இவைகள் நியாயமான கேள்விகளா? இல்லையா? என்பதை முஸ்லிம்கள் ஆய்வு செய்து  பதில் சொல்லட்டும்:

1) மறுமை நாளில், முஸ்லிம்கள் மலைபோன்ற பாவசுமைகளோடு அல்லாஹ்விற்கு முன்பு நின்றால் ஒரு உண்மையான இறைவன் என்ன செய்யவேண்டும்? நீதியான தீர்ப்பு வழங்கவேண்டும். ஆனால், இந்த ஹதீஸ்களில் அல்லாஹ் ஒரு அநியாயமானவனாக காணப்படுகின்றான்.

2) அல்லாஹ் நிகரற்ற அன்புடையோனாக இருந்தால், முஸ்லிம்களை மன்னித்துவிட்டு அவர்களை நேரடியாக சொர்க்கத்திற்கு அனுப்பியிருக்கவேண்டும், அதை விட்டுவிட்டு, முஸ்லிம்களின் பாவசுமையை அப்படியே யூத கிறிஸ்தவர்கள் மீது சுமத்துவது ஏன்? இதிலிருந்து என்ன தெரிகின்றது? மறுமை நாளில், ஒருவரின் பாவத்தை வெறும் வாயால் 'மன்னித்துவிட்டேன், சொர்க்கத்திற்கு போய் சுகித்திரு' என்று அல்லாஹ்வால் சொல்லமுடியவில்லை. முஸ்லிம்களின் சுமையை இன்னொருவரின் மீது சுமத்தினால் தவிர, அவர்களுக்கு சொர்க்கத்திற்கு இடமில்லை என்று சொல்வது போல செயல்படுகிறான் அல்லாஹ்.

3) இதே கேள்வி தான், ஆபிரகாமின் மகன் விஷயத்திலும் நாம் கேட்டோம். ஆபிரகாமின் மகனை ஒரு மகத்தான பலியைக் கொண்டு அல்லாஹ் மீட்டுக்கொண்டானாம்.  ஒருவரை மீட்க அல்லாஹ்விற்கு ஏன்  ஒரு மகத்தான பலி தேவைப்பட்டது? முஸ்லிம்களை மறுமை நாளில் மீட்கும் மகத்தான பலியாக‌ யூத கிறிஸ்தவர்கள் ஏன் இருக்கவேண்டும்? ஒருவருக்கு பதிலாக இன்னொருவரை நியமிக்காமல் (பாவ சுமைகளை மாற்றம் செய்யாமல்)  அல்லாஹ்வால் முஸ்லிம்களை சொர்க்கத்திற்கு அனுப்ப முடியாதா? முஸ்லிம்களே சிந்தியுங்கள்.

4) "ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை" என்பது தான் முஹம்மதுவின் கூற்று! இது என்ன கூத்து? பிறக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் நரகத்திற்குத் தான் செல்வார் என்று அல்லாஹ் ஏற்கனவே முடிவு செய்துவிட்டானாம்! அப்படியானால், நாங்கள் சொர்க்கத்திற்குச் செல்வோம் என்ற நம்பிக்கையில் வாழும் முஸ்லிம்களின் நிலை 'ஐயோ பரிதாபம்' தானா?

5) "எங்களுக்குத் தான் அல்லாஹ் ஒரு யூதனையோ கிறிஸ்தவனையோ இரட்சகனாக கொடுத்து சொர்க்கம் அனுப்புவாரே!" என்று பெருமிதத்தோடு மார்தட்டுகின்றீர்களா முஸ்லிம்களே! உங்களை நேசிக்காமல், ஒவ்வொரு முஸ்லிமும் நரகத்திற்குத் தான் செல்லவேண்டும் என்று முடிவு செய்த அல்லாஹ்வை எப்படி இன்னமும் நம்புகிறீர்கள்?  ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு யூத/கிறிஸ்தவன் இரட்சகனாக மறுமை நாளில் கொடுக்கப்படுவான் என்றுச் சொன்னால், ஜனத்தொகை கணக்கு சரியாக இருக்கின்றதா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

6) அதிகமாக தாவா செய்து, அனேக கிறிஸ்தவர்களை நீங்கள் முஸ்லிமாக  மாற்றிவிட்டால், கிறிஸ்தவர்களாக இருப்பவர்களின் ஜனத்தொகை குறைந்துவிடும். அப்படியானால், உங்களுக்கு மறுமை நாளில் நரகத்திலிருந்து காப்பாற்ற இரட்சகர்கள் (கிறிஸ்தவர்கள்) இல்லாமல் போய்விடுவார்கள். எச்சரிக்கை! எச்சரிக்கை!  கணக்கு புரியுதா?

7) இந்த வரிகளை படிக்கும் நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால், மறுமை நாளில் உங்களின் கணக்கு வரும் போது அல்லாஹ் உங்களிடம், 'தம்பி என்னிடம் யூத கிறிஸ்தவர்கள் ஸ்டாக் (இருப்பு) இல்லை, எனவே, மலைபோல இருக்கும் உன் பாவசுமைகளை மாற்றுவதற்கு என்னால் முடியாது, உன் சுமைகளை நீயே சுமந்துக்கொள், நீ நேரடியாக நரகத்திற்குச் சென்றுவிடு என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?' இஸ்லாமிய லாகிக் எங்கேயோ இடிக்கிறதே!

3) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏன் இப்படி ஜாதிவெறி பிடித்து அலைகின்றான்

யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை என்பது மாத்திரமல்ல, முஸ்லிம்கள் செய்யும் பாவங்களுக்காக யூதகிறிஸ்தவர்களை தண்டிக்கிறார் என்பது மிகவும ஆச்சரியமான விஷயமாகும். 

1. முஸ்லிம்கள் செய்யும் பாவங்களுக்காக ஏன் யூதர்கள் தண்டிக்கப்படவேண்டும்? 

2. ஏன் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கு தரப்படவேண்டிய தண்டனையை ஏற்றுக்கொள்ளவேண்டும்?

3. சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் 5342ன் படி, ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு முஸ்லிமை நரகத்திலிருந்து காப்பாற்றுவான். இதன் படி, நான் ஒரு முஸ்லிமை நரகத்திலிருந்து காப்பேன். இந்த கட்டுரையை படிக்கும் கிறிஸ்தவ சகோதர சகோதரியே, நீங்களும் ஒரு முஸ்லிமை நரகத்திலிருந்து காப்பாற்றுவீர்கள்.  என்னே ஒரு பாக்கியம் பாருங்கள்! (யாருக்கு? முஸ்லிம்களுக்கா? கிறிஸ்தவர்களுக்கா?)

4. குத்ஸி ஹதீஸின் படி, கொடிய பாவங்கள் செய்யும் முஸ்லிம்களின் பாவங்களை எடுத்து, யூத கிறிஸ்தவர்கள் மீது வைப்பது அநியாயமில்லையா?

5. ஜாதி வெறி பிடித்த மனிதர்களைப் பார்த்து இருக்கிறோம், ஆனால், இங்கே ஜாதி வெறி பிடித்த இறைவனைப் பார்க்கிறோம். 

6. முஸ்லிம்கள் பலவீனர்களாக இருந்து, பெரிய மலைபோல பாவங்கள் செய்வார்கள் என்று தெரிந்திருந்த அல்லாஹ்விற்கு, அவர்கள் மன்னிப்பு கேட்கும் போது, அவர்களை மன்னித்துவிட்டு, சொர்க்கத்திற்கு அனுப்பலாமே! ஏன் அவன் யூத கிறிஸ்தவர்களை முஸ்லிம்களின் பலவீனத்துக்காக தண்டிக்கிறார்? இது தான் அளவற்ற அருளாளன் என்பதன் அர்த்தமா? நிகரற்ற அன்புடையோன் என்பதன் அர்த்தம் இது தானா? 

7. கடைசியாக, யூத கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை நரகத்திலிருந்து காக்கும் மகத்தான பலிகளாக கருதப்படமுடியுமென்றால், உலக மக்களின் மகத்தான பலியாக ஏன் இயேசு இருக்கமுடியாது?

முடிவுரை:

இந்த தொடரில் ஹதீஸ்களின் படி ஒருவரின் பாவத்தை மற்றொருவர் எப்படி சுமக்கிறார் என்பதை விளக்கினேன். குர்-ஆனின் படி, ஒருவனை இன்னொருவன் வழிகெடுத்தால் அவனது பாவசுமைகளையும் வழிகெடுத்தவனே சுமக்கவேண்டும். ஆனால், நாம் பார்த்த ஹதீஸ்களின் படி,  முஸ்லிம்களை வழிகெடுக்காத யூத கிறிஸ்தவர்கள் மீது, பாவம் செய்த முஸ்லிம்களின் பாவ சுமையை சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? முஸ்லிம் பொய் சொல்லுவான், கற்பழிப்பான், ஏமாற்றுவான், எல்லாவிதமான பாவங்களைச் செய்து மலைபோல பெருக்கிக்கொள்வான், ஆனால் கியாமத் நாளில் அவைகளை கிறிஸ்தவன் சுமக்கவேண்டும் – என்னே இஸ்லாமிய கோட்பாடு! 

குர்-ஆனின் படியும், ஹதீஸ்களின் படியும், அல்லாஹ் விரும்பினால், ஒருவரின் பாவத்தை இன்னொருவர் சுமக்கும் படி செய்யமுடியும். “சுமக்கமுடியும்” என்பதல்ல, அல்லாஹ் சுமக்கும் படி செய்வான். எனவே, ஒருவரின் பாவத்தை இன்னொருவர் சுமப்பது இஸ்லாமில் இல்லை என்று முஸ்லிம்கள் சொன்னால், அவர்களுக்கு இஸ்லாம் தெரியாது என்று அர்த்தம், அல்லது அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.  

இதே தலைப்பில், இன்னும் சில விவரங்களை அடுத்த தொடரில் காண்போம்.

அடிக்குறிப்புக்கள்:

1) இக்கட்டுரையில் பயன்படுத்திய ஹதீஸ்கள் பற்றி சகோ. சாம் ஷமான் மற்றும் சகோ. டேவிட் உட் அவர்களின் வீடியோ விளக்கம் - யூடியூப்


பக்ரீத் கட்டுரைகள் பக்கம்

ரமளான் கட்டுரைகள் பக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்