குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?

DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?

சாம் ஷமான்

பரிசுத்த பைபிளுக்கு எதிராகவும், குர்‍ஆனுக்கு ஆதரவாகவும் வாதம் புரியும் இஸ்லாமியர்கள் முன்வைக்கும் ஒரு விமர்சனம் "நோவாவின் வெள்ளம்" பற்றியதாகும். டாக்டர் மௌரஸ் புகைலி அவர்களின் புத்தகமாகிய "The Bible, the Qur'an & Science" என்ற புத்தகத்தில் அவர் எழுதிய பிறகு, அனேக இஸ்லாமியர்கள், "உலகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது என்று பைபிள் தவறாக கூறுகிறது" என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த வெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏற்பட்டது, இதனை குர்‍ஆன் சொல்கிறது, இது நவீன விஞ்ஞானத்திற்கும், தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் பொருந்துகிறது என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். நோவா காலத்தின் வெள்ளப்பிரளயம் அந்த மக்களை மட்டுமே பாதித்தது, அது முழு பூமியையும் பாதிக்கவில்லை என்று குர்‍ஆன் தெளிவாகச் சொல்கிறது என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிகிறார்கள்.

துரதிஷ்டவசமாக, குர்‍ஆன் பற்றி அதிகம் தெரியாதவர்களும், இஸ்லாமிய ஆரம்பகால நூல்களை, தொகுப்புக்களை அறியாதவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி, நோவாவின் கால வெள்ளமானது ஒரு சிறிய பகுதியில் மட்டுமே ஏற்பட்டது என்று குர்‍ஆன் சொல்கிறது என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமிய வாதம் புரிபவர்களிடம் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், குர்‍ஆன் வசனம் சொல்லாத ஒன்றை சொன்னதாக இவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள், அல்லது இஸ்லாமிய ஆரம்ப கால நூல்கள் சொல்வதையும், குர்‍ஆன் விரிவுரையாளர்கள் சொல்வதையும் இவர்கள் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.

உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், வெள்ளமானது நோவாவோடும் அவர் குடும்பத்தோடு நெருங்கி வாழ்ந்த மக்களை மட்டுமே குறிப்பிட்டு பாதித்தது என்று எங்கும் சொல்வதில்லை. ஆனால், குர்‍ஆன் ஏன் "நோவா சமூகத்தார்" என்றுச் சொல்கிறது என்பதற்கான காரணம், அவர் தன் சமகால மக்களுக்கு மட்டுமே தன் செய்தியைச் சொன்னார் என்பதற்காகவேயாகும். நோவாவின் எச்சரிக்கைச் செய்தியை மற்ற (நாட்டு) மக்கள் கேட்காததால், மற்ற எல்லா மக்களையும் குறிப்பிட்டு குர்‍ஆன் சொல்லவில்லை.

இதுமட்டுமல்லாமல், முழு உலகமும் வெள்ளத்தால் மூழுகியது என்பதை வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் குர்‍ஆன் வசனங்கள் அனேகம் உண்டு. இப்படிப்பட்ட வசனங்களைத் தான் இஸ்லாமிய எழுத்தாளர்களாகிய அல்-டபரி போன்றவர்கள் "வெள்ளம் முழு உலகத்தையும் சூழ்ந்தது" என்பதை விளக்க பயன்படுத்துகிறார்கள். இஸ்லாமிய எழுத்தாளர்களின் கூற்றுக்களை காண்பதற்கு முன்பாக, நோவாவின் கால வெள்ளம் முழு உலகத்தையும் சூழ்ந்தது என்பதைச் சொல்லும் குர்‍ஆனின் வசன சாட்சிகளைக் காண்போம்.

முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு:

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) "உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை. (குர்‍ஆன் 11:40)

பி.ஜைனுல் ஆபிதீன் மொழிபெயர்ப்பு:

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!" என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர். (குர்‍ஆன் 11:40)

"At length, behold! There came Our Command, and the fountains of the earth gushed forth! We said: `Embark therein, of each two, male and female, and your family- except those against whom the Word has already gone forth,- and the believers.' But only a few believed with him." S. 11:40

பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. (குர்‍ஆன் 11:44)

"Then the word went forth: `O earth! Swallow up thy water, and O sky! withhold (thy rain)! And the water abated, and the matter was ended. The Ark rested on Mount Judi, and the word went forth: `Away with those who do wrong!'" S. 11:44

இவ்வசனங்கள் தண்ணீர் பொங்கினது (earth gushed forth with water) என்றுச் சொல்கிறது, இதனால், நாம் இந்த வெள்ளம் பூமி முழுவதும் ஆக்கிரமித்தது எனலாம். நோவா இருந்த இடத்திலுள்ள நீரூக்கள் மட்டுமே இப்படி பொங்கின என்று இவ்வசனங்கள் சொல்லவில்லை.

அதற்கு, "நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடம்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும் அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்" என்று அவருக்கு நாம் அறிவித்தோம். (குர்‍ஆன் 23:27)

இப்போது ஒருவர் இப்படி கேட்கமுடியும், அதாவது "வெள்ளம் ஏற்பட்டது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே என்றுச் சொன்னால், ஏன் மிருகங்களில் ஒவ்வொரு இனத்திற்கு ஆண் பெண் என்று இரண்டு ஜோடிகள் மிருகங்கள் பாதுகாக்கப்படவேண்டும்?". வெள்ளம் ஒரு பகுதியில் மட்டுமே ஏற்பட்டால், பூமியில் இதர பாகங்களில் உள்ள மிருகங்கள் அழியப்போவதில்லையே! இந்த விவரம் கூட நோவாவின் வெள்ளம் பூமியனைத்தையும் சூழ்ந்தது என்பதைக் காட்டுகிறது.

ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம். மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது. அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம். எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது. (குர்‍ஆன் 54:11-14)

"So We opened the gates of heaven, with water pouring forth. And we caused the earth to gush forth with springs. So the waters met (and rose) to the extent decreed. But We bore him on an (Ark) made of broad planks and caulked with palm-fibre: She floats under Our eyes (and care): a recompense to one who had been rejected (with scorn)!" S. 54:11-14

மறுபடியும், மேற்கண்ட வசனங்கள் "வானங்களின் வாயில்கள் திறந்து, பூமியில் ஊற்றுக்கள் பொங்கின" என்றுச் சொல்கின்றன. இவைகள் நமக்கு இந்த வெள்ளம் பூமி அனைத்திலும் ஏற்பட்டது என்பதைக் காட்டுகிறது.

அப்பால் நூஹ் கூறினார்: "என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே. "நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள். (குர்‍ஆன் 71: 26-27)

"And Noah said: `O my Lord! Leave not of the Unbelievers, a single one on earth! For if Thou dost leave (any of them), they will but mislead Thy devotees, and they will breed none but wicked ungrateful ones.'" S. 71:26-27

மேற்கண்ட வசனங்களில் உள்ள நோவாவின் விண்ணப்பம் "வெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏற்பட்டது" என்ற வாதத்திற்கு எதிராக உள்ளது அதாவது பொருந்துவதாக இல்லை. ஏனென்றால், அவர் "என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே" என்று கூறுகிறார். இது தன் ஊர் மக்களை மட்டுமே குறிப்பதாக இல்லை. ஒருவேளை இஸ்லாமியர்கள் கூறுவது போல, இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்ட வெள்ளமாக இருந்தால், "வெள்ளம் ஏற்படாத இடங்களில் (நாடுகளில்) உள்ள மக்கள் நிச்சயமாக காஃபிர்களாக இருப்பார்கள் மற்றும் அவர்கள் "பாவிகளையும், காஃபிர்களையும் பெற்றெடுப்பார்கள்". இது நோவாவின் வேண்டுகோளுக்கு எதிரடையாக உள்ளது. எனவே, இந்த வசனங்கள் வெள்ளம் பூமியனைத்திலும் ஏற்பட்டது என்பதை சொல்லும் வண்ணமாக‌ உள்ளது.

இந்த குர்‍ஆன் வசனங்கள் அனைத்தும் நேரடியாக அல்லது வெளிப்படையாக வெள்ளம் பூமியனைத்திலும் ஏற்பட்டது என்றுக் கூறவில்லை, இவ்வசனங்களை நாம் நம் விருப்பப்படி பொருள் கூற வாய்ப்பு உண்டாகும் விதமாக இவைகள் உள்ளன என்று சில இஸ்லாமியர்கள் வாதம் புரியக்கூடும். இப்படி இஸ்லாமியர்கள் கூறுவார்களானால்? இதே போல இவ்வசனங்கள் "வெள்ளமானது ஒரு இடத்தில் மட்டுமே ஏற்பட்டது என்று வெளிப்படையாக கூறவில்லை" என்று விளங்குகிறது அல்லவா? மேலே நாம் கண்ட விவரங்களைக் கண்டு, "வெள்ளமானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டது" என்றுச் சொல்வதை முஸ்லீம்கள் நிறுத்தப் போவதில்லை.

இன்னும் மேலதிக விவரங்களாக, சரித்திர ஆசிரியர்களான அல்-டபரி போன்றவர்களின் ஆதாரங்களும் "வெள்ளம் பூமி அனைத்திலும் ஏற்பட்டு, அந்த கப்பலில் இருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து உலக மக்களும் அழிக்கப்பட்டார்கள்" என்பதையே சொல்கிறது. கீழ் கண்ட மேற்கோள்கள் " The History of al-Tabari, vol. 1, General Introduction and From the Creation to the Flood, as translated by Franz Rosenthal " என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.

According to Ibn Humayd- Salamah- Ibn Isahq- al-Hassan b. Dinar- Ali b. Zayd- Yusuf b. Mihran- Ibn Abbas: நாம் [யூசுப் பி. மிஹ்ரனாகிய நான்] இபின் அப்பாஸ் கூற கேட்டது: ... தண்ணீர் மிகவும் அதிகமாக பெருகியது. தோராவின் மக்கள் அந்த தண்ணீர் உயர்ந்த மலை உச்சிக்கு மேலாக 15 அடி உயர்ந்ததாக கருதுகிறார்கள். பூமியிலுள்ள எல்ல உயிரினமும் , உயிர் வாழும் அனைத்தும் அல்லது மரங்களும் தண்ணீரில் மூழுகிப்போயின. நோவாவைத் தவிர மற்றும் அந்த கப்பலில் இருந்தவர்கள் தவிர வேறு யாரும் மிஞ்சவில்லை ( No creature remained except Noah and those with him in the boat, as well as Og b. Anak, as is assumed by the people of the Book.) இறைவன் வெள்ளம் அனுப்பிய காலமுதல், வெள்ளம் பூமியிலிருந்து காயும் வரையுள்ள காலம் ஆறு மாதங்களும் பத்து இரவுகளுமாம். (History of al-Tabari [State University of New York Press; Albany, NY 1989], pp. 360-361)

According to al-Harith- Ibn Sa'd- Hisham- his father- Abu Salih- Ibn Abbas: "இறைவன் நாற்பது பகல்கள் நாற்பது இரவுகள் மழையை அனுப்பினார். காட்டு மிருகங்களும் நாட்டு மிருகங்களும் பறவைகளும் மழையைக் கண்டவுடன் நோவாவிடம் தஞ்சம் புகுந்தன. இறைவனின் கட்டளையின்படியே நோவா ஒவ்வொரு இனத்திலும் ஒரு ஜோடியை கொண்டுவந்தார். இவைகளோடு சேர்த்து, ஆண்களுக்கும் பெண்களுக்கு தடை உண்டாகும் வண்ணமாக நோவா ஆதாமின் சடலத்தில் மீந்திருந்ததை கொண்டு வந்தார். அவர்கள் ரஜ்ஜப் மாதத்தின் 10ம் நாள் அந்த கப்பளுக்குள் நிழைந்தார்கள் மற்றும் முஹர்ரம் மாதம் அஷூரா அன்று (10ம் நாள்) கப்பளிலிருந்து வெளியேறினார்கள். ஆகையால் அவர்கள் அனைவரும் அஷூரா அன்று நோம்பு இருந்தார்கள். தண்ணீர் இரண்டு வகைகளில் வெளிப்பட்டது, இது இறைவனின் கட்டளைப்படி இப்படியாயிற்று: (`And We opened for water munhamirin'- that is, musabbin pouring- `and We fajjarna'- that is, shaqqaqna split- `the earth for springs (to gush forth). The water (from above and below) met for a matter (pre)determined.') தண்ணீர் இரண்டு பிரிவுகளாக வந்தது. ஒரு பங்கு வானத்திலிருந்து வந்தது, ஒரு பங்கு பூமியிலிருந்து வந்தது. பூமியின் மிகப் பெரிய மலையின் உச்சிக்கு மேலாக 15 அடிகள் தண்ணீர் உயர்ந்திருந்தது.

அவர்களோடு கூட அந்தக் கப்பல் பூமிமுழுவதும் ஆறுமாதங்கள் சுற்றியது. பரிசுத்த பூமி (மக்கா மதினா) வரும் வரை அந்த கப்பல் எங்கும் தங்கவில்லை. எனினும், பரிசுத்த பூமிக்குள் (மக்கா மதினாவிற்குள்) நிழையாமல் ஒரு வாரம் அதை சுற்றி சுற்றி வந்தது. ஆதாம் கட்டிய வீடு (காபா) மூழ்காதபடிக்கு மேலே மேலே உயர்த்தப்பட்டது. அந்த வீடு கருங்கல் உள்ள காபாவாகும். பரிசுத்த பூமியை சுற்ற வந்த பிறகு, கப்பலில் இருந்த மக்களோடு, அல் ஜீதி வரும் வரை பூமியின் மீது பிரயாணித்தது. ... அந்த கப்பல் அல் ஜூதியை அடைந்த போது, இப்படியாக கூறப்பட்டது: "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு!” இதன் பொருள் என்னவென்றால், "உன்னிடமிருந்து வந்த தண்ணீரை பூமியே நீ உறிஞ்சிக்கொள்" என்பதாகும். இதே போல "வானமே! (மழையை) நிறுத்திக்கொள் (Heaven, hold back!)" என்று கூறப்பட்டது, இதன் பொருள் என்னவென்றால்,"வானங்களே உங்களிடமிருந்து வந்த தண்ணீரை எடுத்துக்கொள்" என்பதாகும். பூமியிலிருந்த தண்ணீர் மறைந்துவிட்டது, அதாவது தண்ணீரை பூமி உறிஞ்சிக்கொண்டது. வானத்திலிருந்து வந்த தண்ணீர் நாம் காணும் கடலாக மாறியது... (Ibid., pp. 362-363)

மேலே நாம் கண்ட பாரம்பரியமானது, "வெள்ளம் உலகம் முழுவதும் பியாபித்து இருந்தது" என்பதை விளக்குகிறது. அதோடு நின்றுவிடாமல், வெள்ளம் உலகம் முழுவதும் பரவியது என்பதை விளக்க நாம் மேற்கோள் காட்டிய வசனத்தை இந்த பாரம்பரியம் குறிப்பிடுகிறது.

அபூ ஜபர் (அல்-டபரி) கூறுகிறார்: நோவாவும் அவர் குடும்பத்தார்களும் முஸ்லீம்களாக இருந்தார்கள். மற்றும் நோவாவிற்கு "இனி இப்படிப்பட்ட ஒரு வெள்ளத்தை பூமியில் வரவழைப்பதில்லை" என்று இறைவன் வெளிப்படுத்தினான்.

இங்கு குறிப்பிட்ட விவரங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட மட்டுமே ஏற்பட்ட வெள்ளமல்ல, ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில்/நாடுகளில் ஏற்படும் வெள்ளங்கள் இன்றும் ஏற்படுகின்றன. ஆனால், இன்று வரை உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிற வெள்ளம் நோவாவின் காலத்திற்கு பின்பு ஏற்படவில்லை.

Ibn Ishaq, in turn, as we are told by Ibn Humayd- Salamah (- Ibn Ishaq), said... "அவர்கள் கூறினார்கள்: அவரோடு கூட கப்பலில் இருந்தவர்கள் அவரை நம்புகிறவர்களாக இருந்தார்கள், மற்றும் அவரை பின்பற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். எனினும், மற்றவர்கள் அழிந்து ஒழிந்துப்போனார்கள். அவர்களின் சந்ததியும் அழிந்துவிட்டது. இன்று உலகில் வாழும் மக்கள் அனைவரும் நேரடியாக ஆதாமின் வழியில், நோவாவின் வழியாக வந்த சந்ததிகளாவார்கள். ஆதாமின் இதர சந்ததிகள் அழிந்துப்போனார்கள். இறைவன் கூறினான்: "அவரது சந்ததிகளை நம உயிருள்ளவர்களாக வைத்தோம்" (In this world today, the children of Adam are the direct offspring of Noah and of no other descendants of Adam, as God says: `And We made his offspring the survivors.'). (Ibid., p. 368)

வெள்ளம் வெறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டது என்று நாம் நினைத்துக்கொண்டால், நாம் அனைவரும் நோவாவின் சந்ததிகளாக இருக்கிறோம் என்ற விவரமானது பொய்யாக இருக்கும். உண்மையில் "வெள்ளமானது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏற்பட்டது என்ற வாதமானது பெர்சிய மேஜியன்களின் (Persian Magians) நம்பிக்கையாகும். இதனையே இஸ்லாமியர்கள் இப்போது கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

"வெள்ளம் பற்றி மேஜியன்களுக்கு (Magians) எந்த அறிவும் இல்லை. அவர்கள் கூறுகிறார்கள், "ஆதாமைப் போல ஜாயுமத் (Jayumart) என்பவரின் கால முதல் நம் ஆட்சி தடையில்லாமல் நடந்துக்கொண்டு இருக்கிறது. பிரோஜ் பி யஜ்ஜர்த் பி ஷஹ்ரியார் வரை ஆட்சியானது ஒருவர் கையிலிருந்து மற்றோருவர் கைக்கு மாறிக்கொண்டு இருக்கிறது”. அவர்கள் இதையும் கூறுகிறார்கள், “வெள்ளம் சம்மந்தப்பட்ட கதையானது உண்மையானதாக இருந்தால், மக்களின் வம்ச வளர்ச்சி தடை செய்யப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டு இருக்கும். அவர்களில் சிலர் வெள்ளமானது பாபில் என்ற இடத்தின் சுற்றுப்புறங்களில் மட்டுமே ஏற்பட்டது என்று நினைக்கிறார்கள். மற்றும் ஜாயுமத்தின் வம்சத்தினர் கிழக்கு பகுதியில் வாழ்ந்ததால், வெள்ளம் அவர்கள் வரையில் வரவில்லை” என்று நம்புகிறார்கள்.

அபூ ஜபர் (அல்-டபரி) கூறுகிறார்: மேலே சொன்ன அவர்களின் கூற்று இறைவன் சொன்னதற்கு முரண்பட்டதாக உள்ளது. இறைவன் சொன்னது தான் உண்மையாது: “அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம். மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.” இதன் படி, இறைவன் சொல்வதிலிருந்து, பூமியில் இருப்பவர்கள் அனைவரும் நோவாவின் சந்ததிகளே தவிர மற்றவர்கள் அல்ல என்பது புரியும். (Ibid., p. 369)

மேலும் சில வரிகளை கடந்து படிக்கும் போது:

According to Ibn Bashshar- Ibn `Athmah- Sa'id b. Bashir- Qatadah- al-Hasan- Samurah b. Jundub- the Prophet, in connection with commenting on God's word: `And We made his offspring the survivors': Shem, Ham, and Japheth. (Ibid, p. 369)

According to Ibn Bashshar- Ibn `Athmah- Sa'id b. Bashir- Qatadah- al-Hasan- Samurah b. Jundub: இறைவனின் வார்த்தைகள் பற்றி நபி அவர்கள் கூறும் போது: "அவர்களுடைய சந்ததியாரை (பிரயளத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும் படிச் செய்தோம்"- அவரின் சந்ததிகள் “சேம் காம் யாப்பேத்” என்பவர்கள் ஆவார்கள் (Ibid, p. 369).

நோவாவும் அவரது குடும்பம் மட்டுமே பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்டு பிழைத்ததாக முஹம்மது நம்புகிறார். முஹம்மதுவின் இப்படிப்பட்ட நம்பிக்கை எப்போது உண்மையானதாக இருக்குமென்றால், "வெள்ளமானது உலகளாவியதாக இருக்கவேண்டும் மற்றும் எல்லா மனிதர்களும் மரித்து இருக்கவேண்டும்" (Muhammad believed that only Noah and his immediate family survived the flood. This could only be so if the flood were indeed universal, wiping out all flesh.)

பிஷர் (பி முஅத்) - யாஜித் (பி. ஜுரெ) - சயித் (பி. அபி அருபா) கதாதா இறைவனின் வார்த்தையாகிய "அவர்களுடைய சந்ததியாரை (பிரயளத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும் படிச் செய்தோம்" என்ற வரிகளைப் பற்றி கூறும் போது “எல்லா மனித இன மக்களும் நோவாவின் சந்ததிகள் ஆவார்கள் என்றார்” (Ibid, pp. 369-370)

இந்த கடைசி விவரத்தை இஸ்லாமிய விரிவுரையாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் இபின் அப்பாஸ் கூறியதாகும்:

According to Ali b. Dawud- Abu Salih (`Abdallah b. Salih)- Mu'awiyah (b. Salih)- `Ali (b. Abi Talhah) - இறைவனின் வார்த்தையாகிய “அவர்களுடைய சந்ததியாரை (பிரயளத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும் படிச் செய்தோம்" என்ற வரிகளைப் பற்றி இபின் அப்பாஸ் கூறும் போது “நோவாவின் சந்ததியினர் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள்என்றார். (Ibid, p. 370 all bold emphasis ours)

இபின் கதீர் கீழ்கண்ட விதமாக அங்கீகரிக்கிறார்:

நோவாவின் மீது நம்பிக்கைக் கொண்டு அவரோடு கப்பலில் இருந்தவர்களைத் தவிர மற்ற உலக மக்களை அல்லாஹ் வெள்ளத்தில் மூழ்கச் செய்த போது, நோவாவின் சந்ததிகளை மட்டுமே அதன் பிறகு உலகத்தில் வாழ்கிறவர்களாக மாற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த பிறகு, இப்போது பூமியில் வாழும் அனைத்து மக்களும் நோவாவின் சந்ததிகளே ஆவார்கள். (Tafsir Ibn Kathir, Abridged Volume 3, Parts 6, 7 & 8, Surat An-Nisa, Verse 148 to the end of Surat Al-An'am, Abridged by a group of scholars under the supervision of Shaykh Safiur-Rahman Al-Mubarakpuri [Darussalam Publishers & Distributors; Riyadh, Houston, New York, Lahore, first edition January 2000], p. 399; bold and capital emphasis ours)

கீழ் கண்ட குர்‍ஆன் வசனங்களுக்கு விரிவுரை எழுதும் போது:

அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம். மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். (குர்‍ஆன் 37:75-77)

இபின் கதீர் எழுதுகிறார்:

<அவர்களுடைய சந்ததியரை நிலைத்திருக்கும்படி செய்தோம்> 'Ali bin Abi Talhah reported that Ibn 'Abbas, may Allah be pleased with him, "There was no one left apart from the offspring of Nuh, peace be upon him." Sa'id bin Abi 'Arubah said, narrating from Qatadah ...

"All people descended from the offspring of Nuh, peace be upon him." At-Tirmidhi, Ibn Jarir and Ibn Abi Hatim narrated from Samurah, may Allah be pleased with him, that the Prophet ... said concerning the Ayah ...

...

(சேம், காம், யாப்பேத்.)

சமுரா (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள் மூலமாக கேட்டு, இமாம் அஹமத் பதிவு செய்தது என்னவென்றால்,

அல்லாஹ்வின் தூதர் சொன்னது என்னவென்றால், சேம் என்பவர் அரேபியர்களின் தந்தையாவார், காம் என்பவர் எத்தியோப்பியர்களின் தந்தையாவார் மற்றும் யாப்பேத் என்பவர் ரோமர்களின் தந்தையாக இருக்கிறார். (Tafsir Ibn Kathir Abridged, Volume 8, Surat Al-Ahzab, Verse 51 to the end of Surat Ad-Dukhan, First edition: September 2000, pp. 262-263; bold emphasis ours)

மேலே கண்ட அனைத்து விவரங்களும் இபின் கதீர், இபின் அப்பாஸ் மற்றும் முஹம்மது போன்றவர்கள் சொன்ன விவரங்களிலிருந்து எடுத்தவையாகும். இவர்களின் இந்த விவரங்கள் "குர்‍ஆன் சொல்லும் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடம் சம்மந்தப்பட்டது" என்றுச் சொல்லும் தற்கால இஸ்லாமியர்களின் வாதத்திற்கு எதிராக மறுப்பதாக உள்ளது.

இந்த ஆய்வை முடிப்பதற்கு முன்பாக இஸ்லாமியர்களின் கடைசி வாதம் பற்றி சிறிது சிந்திப்போம். அதாவது, "பேழையானது (கப்பல்) இன்று துருக்கி என்று அழைக்கும் நாட்டிலுள்ள அராரத் (Mt. Ararat) என்ற மலையில் தங்கியது என்று பரிசுத்த பைபிள் சொல்வது (ஆதி 8:4) தவறானது, ஆனால், அந்த பேழை ஜூதி (Mt. Judi) என்ற மலையில் தங்கியது (குர்‍ஆன் 11:44) என்று குர்‍ஆன் சரியாகச் சொல்கிறது" என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.

முதலாவது, பேழை "அராரத் மலையில் (Mt. Ararat)" தங்கியது என்று பைபிள் சொல்லவில்லை, அதற்கு பதிலாக, பேழை "அராரத் மலைகளில் (the mountains of Ararat)" தங்கியது என்று கூறுகிறது. பைபிளில் குறிப்பிட்ட அராரத் என்பது பழமையான " Urartu" மலைப் பகுதிகளை குறிக்கிறது. இரண்டாவதாக, பேழை "ஜூதி" மலையில் தங்கியது என்ற விவரம் இஸ்லாமுக்கு முன்பே எல்லா மக்களுக்கும் தெரிந்திருந்த ஒரு விவரமாகும். இந்த இரண்டு விவரங்களை கிறிஸ்த மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் அங்கீகரித்துள்ளனர்.

என் ஐ வி ஸ்டடி பைபிள் ஆதியாகம் 8:4க்கு கீழ்கண்ட பின்குறிப்பை தருகிறது:
(The NIV Study Bible's note on Genesis 8:4 states,)

"mountains. The word is plural and refers to a range of mountains. Ararat. The name is related to Assyrian Urartu, which became an extensive and mountainous kingdom (see Jer 51:27; see also Isa 37:38), including much of the territory north of Mesopotamia and east of modern Turkey. The ark's landfall was probably in southern Urartu." (bold emphasis ours)

"ஜூதி" மலையைப் பற்றி முஹம்மது அஸத் தன் புத்தகமாகிய "The Message of the Qur'an" என்ற புத்தகத்தில் கீழ்கண்ட விதமாக விவரிக்கிறார்.

"This mountain, known in ancient Syriac as Qardu, is situated in the region of Lake Van, almost twenty-five miles north-east of the town Jazirat Ibn Umar, capital of the modern Syrian district of Al-Jazirah. It `owes its fame to the Mesopotamian tradition which identifies it, and not Mt. Ararat, with the mountains on which Noah's ark rested... This localization of the ark's resting place... is certainly based on Babylonian tradition' (Encyclopedia of Islam I, 1059). We should, however, remember that the designation Ararat (the Assyrian Urartu) at one time included the whole area to the south of Lake Van, in which Jabal Judi is situated: this might explain the Biblical statement that `the ark rested... upon the mountains of Ararat' (Genesis viii, 4)." (Asad, The Message of the Qur'an [Dar al-Andalus Limited; 3 Library Ramp, Gibraltar, 1984], p.320, f. 66 bold emphasis ours)

கு‍ர்‍ஆன் சொல்லும் விவரமான "பேழையானது ஜூதி மலையில் தங்கியது" என்ற விவரம், முஹம்மதுவின் காலத்தில் எல்லாருக்கும் தெரிந்திருந்த விவரமேயாகும். அது ஒன்றும் புதிதான விஷயமல்ல. இதனை அங்கீகரித்து, எ. யூசுப் அலி கீழ்கண்ட விதமாக எழுதுகிறார்:

"Let us get a little idea of the geography of the place. The letters J, B and K are philologically interchangeable, and Judi, Gudi, Kudi are sounds that can pass into each other. There is no doubt that the name is connected with the name `Kurd', in which the letter r is a later interpolation, for the oldest Sumerian records name a people called Kuti or Gutu as holding the middle Tigris region not later than 2000 B.C. (see E. B., Kurdistan). That region comprises the modern Turkish district of Bohtan, in which Jabal Judi is situated (near the frontiers of modern Turkey, modern Iraq, and modern Syria), and the town of Jazirat ibn `Umar, (on the present Turco-Syrian frontier), and it extends into Iraq and Persia. The great mountain mass of the Ararat plateau dominates this district. The mountain system `is unique in the Old World in containing great sheets of water that are bitter lakes without outlets, Lake Van and Lake Urumiya being chief' (E. B., Asia). Such would be the very region of a stupendous Deluge if the usual scanty rainfall were to be changed into a very heavy downpour. A glacier damming of Lake Van in the Ice Age would produce the same result. The region has many local traditions connected with Noah and the Flood. The Biblical legend of Mount Ararat being the resting place of Noah's Ark is hardly plausible, seeing that the highest peak of Ararat is over 16,000 feet high. If it means one of the lower peaks of the Ararat system, it agrees with Muslim tradition about Mount Judi (or Gudi), and this is in accordance with the oldest and best local traditions. These traditions are accepted by Josephus, by the Nestorian Christians, and indeed by all the Eastern Christians and Jews, and they are the best in touch with local traditions. See (Viscount) J. Bryce, `Transcaucasia and Ararat,' 4th ed., 1896, p. 216." (Ali, The Holy Qur'an, f. 1539, p. 525)

பரிசுத்த பைபிள் "அராரத் மலைகளில்" பேழை தங்கியது என்றுச் சொன்னதை தவறாக புரிந்துக்கொண்டு, அராரத் மலையில் தங்கியது என்று நினைத்துக்கொண்டு யூசுப் அலி அவர்கள் பைபிளை குற்றம் பிடித்தாலும், ஜூதி மலைப் பற்றி அவர் கூறிய விவரம் குறிப்பிடத்தக்கது. யூசுப் அலி அவர்கள் இந்த ஜூதி மலையில் பேழை தங்கியது என்ற விவரமானது முஹம்மது பிறப்பதற்கு முன்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, இன்னும் சொல்லப்போனால் இயேசுவின் காலத்திலேயே எல்லாருக்கும் தெரிந்திருந்த விஷயம் என்றுச் சொல்கிறார். ஆக, குர்‍ஆன் ஒன்றும் புதியதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை, குர்‍ஆனின் அனேக கதைகள் எப்படி எல்லா அரபியருக்கு தெரிந்திருக்கும் கதைகளாக இருந்தனவோ, அதுபோல, இந்த ஜூதி மலைப் பற்றிய விவரமும் எல்லாருக்கும் தெரிந்திருக்கின்ற விவரமேயாகும்.

முடிவுரை

நம்முடைய இந்த ஆய்வில், நோவாவின் கால வெள்ளம் முழு உலகத்தையும் வியாபித்தது என்பதை விளக்க சில குர்‍ஆன் வசனங்களை நாம் மேற்கோள் காட்டினோம். இதே போல, இஸ்லாமிய அறிஞர்களாகிய இபின் அப்பாஸ் போன்றவர்களும் மற்றும் முஹம்மதுவும் "வெள்ளமானது உலகமயமானது" என்பதை அங்கீகரித்துள்ளார்கள் என்பதை கவனித்தோம். இந்த விவரங்களை எல்லாம் நாம் கவனத்தில் கொண்டால், இன்றைய இஸ்லாமிய வாதம் புரிபவர்கள் சொல்லும் விவரமானது அதாவது, குர்‍ஆன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைச் சொல்கிறது என்ற வாதமானது, எல்லா ஆதாரங்களுக்கும் எதிரானது என்பது விளங்கும். இவர்களின் வாதம் குர்‍ஆனில் சொல்லப்பட்ட மற்றும் ஆரம்ப இஸ்லாமிய சரித்திர விவரங்களுக்கு முரண்பட்டதாக இருப்பதை காணலாம்.

ஆங்கில மூலம்: DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?


இதர குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும்
ஆசிரியர் சாம் ஷமான் அவர்களின் கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்